வீட்டின் முன் வளர்க்க கூடாத செடிகள் என்ன? அதனால் உண்டாகும் பிரச்சினை தான் என்ன? என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

plants-chedigal
- Advertisement -

வீட்டில் செடி, கொடிகள், மரங்கள் வளர்ப்பது என்பது மிக பெரிய புண்ணியச் செயலாகும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை புண்ணியத்தை சேர்க்கிறான்? என்கிற கணக்கில் அவன் விதைக்கும் விதைகளும் சேருகின்றன. எனவே நீங்கள் தானதர்மங்கள் செய்யவில்லை என்றால் கூட முடிந்த போதெல்லாம் விதைகளை விதைத்து விருட்சமாக்கி மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் செய்து வந்தாலே புண்ணியம் பன்மடங்காகப் பெருகும். இந்த வரிசையில் எந்த செடிகளை, மரங்களை வீட்டிற்கு முன் வளர்க்க கூடாது? ஏன் வளர்க்கக் கூடாது? அதனால் விளையும் ஆபத்துகள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ளவிருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ginger-plant-growing

விதை என்பது சாதாரண விஷயம் அல்ல, ஒரு சிறு விதை தான் மிகப்பெரிய விருட்சமாகி பல்வேறு நன்மைகளை இந்த உலகிற்கு கொடுத்தருள்கிறது. எனவே எந்த விதையை விதைத்து நீங்கள் ஒரு செடியை வளர்த்தாலும், அதன் பலனையும் விரைவாக நீங்கள் அனுபவிப்பீர்கள். நீங்கள் வீட்டிற்கு முன்னும், பின்னும் நிறைய செடி, கொடிகளை வளர்த்து வந்தால் உங்களுக்கு வாஸ்து தோஷம் கூட ஒன்றுமே செய்ய முடியாது. வாஸ்து குறைக்கு சிறந்த பரிகாரம் வீட்டில் செடிகளை வளர்ப்பது தான்.

- Advertisement -

அப்படி இருக்கும் பொழுது வீட்டிற்கு முன் சில செடி கொடிகளை நாம் வளர்த்தால் நமக்கு ஆபத்து வந்து சேரும் என்று எச்சரிக்கிறது சாஸ்திரம். இதனுள் அறிவியல் பூர்வமான உண்மைகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றன எனவே சரியாக புரிந்து கொண்டால் அந்தச் செடிகளை ஏன் வீட்டிற்கு முன் வளர்க்க கூடாது? என்று கூறுவதன் உண்மையும் புரியும். வீட்டிற்கு முன்பு வளர்க்க கூடாத செடிகள்: ரோஜா, கற்றாழை, அரளி, சீதாப்பழம், முருங்கை, வாழை, தென்னை போன்ற செடிகளை வளர்க்க கூடாது என்பார்கள்.

gold arali

ரோஜா, கற்றாழை, சீதாப்பழம் போன்ற செடிகளில் இருக்கும் முட்களும், பூச்சிகளும் சிறு குழந்தைகளை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதற்காக தான் அதனை வீட்டின் முன் வளர்க்க கூடாது என்று அறிவுறுத்தினர். மற்றபடி அதில் எந்த தோஷமும் இல்லை. வீட்டிற்கு பின்புறம் அல்லது குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்து வளர்க்கலாம். வாழை, முருங்கை எளிதில் முறிந்துவிடும் மரங்களாகும். முருங்கையில் இருக்கும் கம்பளிப் பூச்சிகள் ஆபத்தை விளைவிக்கும். அதனால் தான் முருங்கை, வாழை போன்ற மரங்களை வீட்டிற்கு முன்பு வைத்து வளர்க்கக்கூடாது என்று அறிவுறுத்தினார். அரளி விஷமுள்ள காயை கொடுக்கும் இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

- Advertisement -

அதே போல தென்னையிலிருந்து விழக்கூடிய குருத்துகள் யாருடைய தலையிலும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக தான் வீட்டிற்கு முன்பு வைத்து வளர்க்கக்கூடாது என்று கூறினர். இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும், ஒவ்வொரு அர்த்தங்கள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆன்மீக ரீதியாக இதனை கூறும் பொழுது தவறாக பார்ப்பதை விட அதில் என்ன அர்த்தம் ஒளிந்து கொண்டிருக்கும்? என்பதை சிந்தித்தாலே போதும்.

Thulasi

வீட்டுக்கு முன் வைத்து வளர்க்க வேண்டிய முக்கிய செடிகளையும் பார்த்து விடுவோம். வீட்டிற்கு முன்பு துளசிச் செடியை வளர்ப்பது மிகவும் அதிர்ஷ்டகரமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். அதே போல மகாலட்சுமி நிறைந்து இருக்கும் மருதாணி மற்றும் மாதுளை செடிகளையும் வீட்டிற்கு முன்னால் வைத்து வளர்த்தால் பெரும் அதிர்ஷ்டமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். பாரிஜாதம், மல்லிகை, முல்லை, சண்பகம், நித்தியமல்லி மற்றும் வாசமுள்ள பூச்செடிகள் போன்றவற்றை வீட்டிற்கு முன்னால் வைத்து வளர்ப்பது நன்மைகளைப் பயக்கும்.

nithya-malli1

காலையில் எழுந்ததும் பசுமையான பூச்செடிகளை நாம் கண்களால் பார்க்கும் பொழுது மனம் புத்துணர்ச்சி அடைகிறது. இதனால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட கூடிய ஆற்றலை பெறுவோம். அதே போல வெற்றிலை கொடியை வளர்ப்பதும் அதிர்ஷ்டம் தரும் விஷயமாகும், ஆனால் வெற்றிலையை தனியாக வளர்ப்பதை விட, அதனுடன் சேர்த்து மற்ற செடிகளையும் வளர்ப்பது பலன் அதிகரிக்க செய்யும்.

- Advertisement -