வாசம் நிறைந்த விளக்கு பொடி தயார் செய்வது எப்படி?

vialkku
- Advertisement -

பெரும்பாலும் நமக்கு மனசு சரியில்லை என்றால் கோவிலுக்கு செல்வோம். ஆனால் நம்முடைய வீட்டையே கோயிலாக மாற்றிவிட்டால் நமக்கு மனசு சரியில்லாமல் போகவே போகாது. வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக இருந்தால், நம்முடைய வீடும் கோவிலாக மாறும். சும்மாவே இருந்தால் வீட்டில் மகாலட்சுமி அம்சம் வந்துவிடுமா.

அதற்கு சில பல வேலைகளை செய்து பார்க்க வேண்டும். அதில் ஒரு வேலை தான் நம்முடைய வீட்டை வாசமாக வைத்துக் கொள்வது. தினமும் காலையும் மாலையும் விளக்கு ஏற்றும் போது அந்த விளக்கில் கொஞ்சமாக, இந்த பொடியை சேர்த்து விளக்கு ஏற்றுங்கள். இந்த பொடியின் நறுமணம் உங்கள் வீடு முழுவதும் பரவி ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும்.

- Advertisement -

அது உங்களுக்கு மன நிம்மதியை 24 மணி நேரமும் கொடுக்கும். இனி மனசு சரியில்லை என்று கோவிலுக்கு போகவே மாட்டீங்க. பிறகு மனசு சந்தோஷத்தோடு தான் கோவிலுக்கு போவீங்க. வாங்க அந்த விளக்கு பொடியை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

வாசம் நிறைந்த விளக்கு பொடி தயார் செய்யும் முறை

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். மெலிசாக இருக்கும் சுருள் பட்டை 2 விரல் அளவு அதில் சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து போட்டுக் கொள்ளவும். கிராம்பு 15, ஏலக்காய் 10, டைமண்ட் கற்கண்டு 1 ஸ்பூன், போட்டு மிக்ஸி ஜாரில் இரண்டு ஓட்டு ஓட்டுங்க போதும். இது குருணை குருணையாக அரைபட்டு கிடைத்துவிடும்.

- Advertisement -

ரொம்பவும் நைசாக அரைபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி பூஜையறை பொருட்கள் இருக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி இந்த பொடியை 1/2 ஸ்பூன் அளவு அந்த எண்ணெயில் சேர்த்து அதில் விளக்கு திரி போட்டு, விளக்கு ஏற்றி வைத்து பாருங்கள்.

இந்த விளக்கில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் அத்தனை லட்சுமி கடாட்சத்தோடு இருக்கும். தேவைப்பட்டால் இந்த பொடியில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த வாசமே நமக்கு கோவிலில் இருக்கக்கூடிய ஒரு மன திருப்தியை கொடுத்து விடும். இதை சொல்லி உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஒருமுறை இந்த பொடியை போட்டு விளக்கு ஏற்றி வீட்டில் இறை வழிபாடு செய்து பாருங்கள். கிடைக்கக் கூடிய மன நிம்மதி உணருவீர்கள்.

- Advertisement -

இது கார்த்திகை மாதம். அடுத்து வரக்கூடியது மார்கழி மாதம். வாசலில் விளக்கு ஏற்றும் வழக்கம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். அந்த மண் அகல் விளக்கில் இந்த பொடியை போட்டு தீபம் ஏற்றினால் வீட்டிற்குள் அத்தனை ஐஸ்வர்யம் கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஏலக்காய் பரிகாரம்

சில பேருக்கு இதை காமாட்சி அம்மன் விளக்கு போட்டு ஏற்றலாமா என்ற சந்தேகம் எழும். ஏற்றலாம் தவறு ஒன்றும் கிடையாது. இருந்தாலும் இதற்காக தனியாக மண் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றுவது சிறப்பு. மண் அகல் விளக்கில் நாம் ஏற்றக்கூடிய தீபம் நமக்கு இரட்டிப்பு பலனை தரும் என்பதாக சொல்லப்பட்டுள்ளது. காரணம் அந்த அகல் விளக்கில் நமக்கு பஞ்ச பூதங்களின் தத்துவமும் அடங்கி இருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய வழிபாட்டை பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.

- Advertisement -