உடம்பிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் இந்த சுவையான பூண்டு குழம்பை கிராமத்து முறைப்படி இவ்வாறு செய்து பாருங்கள்

poondu
- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்பொழுதெல்லாம் அஜீரணக்கோளாறு, வாய்வு பிரச்சனை, நெஞ்சு கரிப்பு போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இவற்றை மருத்துவரிடம் சென்று தான் குணப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது உடம்பிற்கு தேவையில்லாத மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் பிரச்சனைகள் அதிகமாகுமே தவிர நிரந்தர தீர்வு என்பது கிடைக்காது. எனவே நமது முன்னோர்கள் சொன்னபடி நமது சமையலின் வழியாகவே நமது உடல் நல பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். அவ்வாறு இந்த பூண்டு குழம்பை ஒருமுறை சமைத்து கொடுத்து பாருங்கள். இங்கு கூறப்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் சட்டென காணாமல் போய்விடும். வாருங்கள் இந்த பூண்டு குழம்பை எவ்வாறு கிராமத்து முறைப்படி பக்குவமாக செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

stomach-

தேவையான பொருட்கள்:
பூண்டு – கால் கிலோ, பெரிய வெங்காயம் –1, தக்காளி – 1, புளி – எலுமிச்சம்பழ அளவு, எண்ணெய் – 100 கிராம், தனியா தூள் – ஒரு ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், வெல்லம் – சிறிய துண்டு, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து புளித்தண்ணீர் எடுத்து வைக்கவேண்டும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கால் கிலோ பூண்டைத் தோலுரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

onion-rice1

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, 100 கிராம் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து அதனுடன் பூண்டு மற்றும் கருவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கடாயை ஒரு தட்டு போட்டு மூடி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இவை நன்றாக கொதித்து மிளகாய் தூள் வாசனை சென்றதும் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

poondu-kozhambu2

5 லிருந்து 10 நிமிடம் கழித்து குழம்பில் எண்ணெய் தனியாக பிரிந்து வரும். அந்த சமயத்தில் சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து, இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் கமகம வாசனையுடன் கிராமத்து சுவையில் அருமையான பூண்டு குழம்பு தயாராகிவிட்டது.

- Advertisement -