கிராமத்து சுவையில் ஒரு முறை இவ்வாறு சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்து பாருங்கள். சட்டி நிறைய சாதம் செய்தாலும் ஒரு பருக்கை கூட மிஞ்சாது

vaththa
- Advertisement -

இன்றைய தலைமுறையினர் என்னதான் வித விதமான சுவையில் உணவுகளை சமைத்துக் கொடுத்தாலும், கிராமங்களில் செய்யக்கூடிய உணவும் அதன் சுவையும் எப்பொழுதும் தனி சுவையில் தான் இருக்கும். தங்கள் கையினால் மசாலா அரைத்து மனமனக்க குழம்பு வைத்துக் கொடுத்தால், அந்த வாசனை அக்கம்பக்கத்து வீட்டாரையும் சுண்டி இழுக்கும். அந்த அளவிற்கு அவர்கள் கைப்பக்குவம் குழம்பின் சுவையை அதிகரிக்கிறது. இவ்வாறு கிராமத்தில் செய்யும் அதே பக்குவத்தில் நமது வீட்டிலும் இந்த சுண்டைக்காய் வத்தல் குழம்பை ஒருமுறை செய்து சுடச்சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். அதன் சுவைக்கு நீங்களும் அடிமையாகி விடுவீர்கள். சாப்பிட்டு முடித்த பிறகும் இதன் சுவை நாவை விட்டு மறையாது. வாருங்கள் இந்த சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
புளி – எலுமிச்சைப்பழ அளவு, சாம்பார் பொடி – 2 ஸ்பூன், சில்லி பவுடர் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், வெல்லம் சிறிய துண்டு – 1, சுண்டைக்காய் வத்தல் – 3 ஸ்பூன், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் – 50 கிராம், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் புளியை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து, அதனை கரைத்து, வடிகட்டி புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த புளி கரைசலில் 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் சில்லி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 50 கிராம் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துப் பொறிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் சுண்டைக்காய் வத்தல் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள குழம்பு கரைசலை நன்றாகக் கொதிக்க விடவேண்டும். குழம்பு மிளகாய் தூள் வாசனை மறைந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை குழம்பை கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அரிசி மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த கரைசலை குழம்புடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அதன் பின் இதனுடன் ஒரு ஸ்பூன் பொடித்த வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பிறகு இவை அனைத்தும் சேர்ந்து ஐந்திலிருந்து ஏழு நிமிடம் நன்றாக கொதித்த பிறகு, ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -