நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால், தும்பிக்கை பலத்தோடு விரைவில் கடனை அடைத்து விடுவீர்கள்! உங்களது வாழ்வே சுபிட்சமாக மாறிவிடும்.

vinayagar

நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால், நமக்கு தும்பிக்கை வைத்திருக்கும் யானை பலம் ஏற்பட்டு எப்படிப் பட்ட கடனையும் அடைக்க மனதைரியம் வந்துவிடும். தும்பிக்கை நாதனை கும்பிட்டால் தீராத பிரச்சனை கூட தீரும் என்பதுதானே நம்பிக்கை. அந்த விநாயகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தீர்க்க முடியாத கடன் பிரச்சனையும் தீரும். எந்த குறிப்பிட்ட நாளில் விக்னங்களை தீர்க்கும் விநாயகரை, எப்படி முறையாக வழிபட்டால் கடன் பிரச்சனை தீரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Vinayagar-1

நமக்கு தீராத கடன் பிரச்சினை ஏற்படுகிறது என்றால் ஏதோ ஒரு கெட்ட நேரம் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம். கெட்ட நேரத்தை நம் வீட்டிலிருந்து துரத்தியடிக்க என்னதான் செய்வது என்று போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் நல்ல வழிகாட்டியாக அமையும். ஏனென்றால் எந்தப் பிரச்சனையும் கண்டு அஞ்சாத மன தைரியம் ஒருவருக்கு வந்து விட்டாலே போதும். அந்த பிரச்சனையை சுலபமாக தீர்க்க ஒரு வழி நமக்கு கிடைத்துவிடும்.

ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி, அஷ்டமி திதி, அல்லது பிரதமை திதி இந்த நான்கு நாட்களிலும் விநாயகரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். அப்படி விநாயகர் கோவிலுக்கு செல்லும் போது கட்டாயமாக அருகம்புல் மாலையை வாங்கி செல்ல வேண்டும். அருகம்புல் மாலையை விநாயகருக்கு சாத்திவிட்டு, உங்களது பேரைச் சொல்லி அர்ச்சனையும் செய்து விடுங்கள்.

arugampul-vinayagar

அதன் பின்பு புரோகிதரிடம் சொல்லி, விநாயகர் கழுத்திலிருந்து ஒரு அருகம்புல் மாலையை நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வர வேண்டும். (அந்த மாலையானது நீங்கள் செலுத்திய மாலையாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஒருவர் செலுத்திய மாலையாகவும் இருக்கலாம். ஆனால் அந்த அறுகம்புல் விநாயகரின் திருவுருவத்தை தொட்டு இருக்கவேண்டும் அவ்வளவுதான்.)

- Advertisement -

எடுத்து வந்த அந்த மாலையை உங்கள் வீட்டு பூஜை அறையில் பத்திரமாக வைத்து விடுங்கள். இரண்டு மூன்று நாட்களில் அருகம்புல் நன்றாக காய்ந்த நிலைக்கு வந்துவிடும். பின்பு அதை நன்றாக தூள்செய்து உங்கள் வீட்டில் சாம்பிராணி பொடியோடு கலந்துவிட வேண்டும். அருகம்புல் தூளை, கலந்த சாம்பிராணிப் பொடி தூபத்தை தினம்தோறும் போட்டு உங்கள் வீடு முழுவதிலும் காட்டி வாருங்கள்.

arugampul juice

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் நல்ல பலனை உங்களால் உணர முடியும். உங்களுக்கு இருக்கும் தீர்க்க முடியாத கடனை தீர்ப்பதற்கும் ஒரு வழி கிடைக்கும். வருமானம் பெருகும். வீட்டில் நிம்மதி நிலவும். வீட்டிலிருக்கும் எந்த கெட்ட சக்தியும் தெறித்து ஓடிவிடும்.

Vinayagar

உங்களது பிரச்சினைகள் தீர்ந்து விடும். தொடர்ந்து கடன் பிரச்சனை வராமல் இருக்க,  மேற்குறிப்பிட்டுள்ள இந்த நான்கு தினங்களில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வரலாம். ஒருமுறை வாங்கிவந்த அறுகம்புல் பொடி கலந்த சாம்பிராணி தூபம் தீர்ந்து விட்டால், மறுபடியும் இந்த நான்கு தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் விநாயகர் கோவிலில் இருந்து அறுகம்புல் மாலையை வீட்டிற்கு வாங்கி வந்து இதேபோல் பொடியை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நம்முடைய வீட்டில் சுபிட்சம் நிறைந்து இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பார்ப்பதற்கு இது ஒரு சிறிய பரிகாரம் போல் தெரிந்தாலும் அருகம்புல்லுக்கு இருக்கும் சத்து மிக அதிகம். விநாயகரின் சிலையின் மேலிருந்து எடுக்கப்பட்ட அறுகம்புல்லின் வலிமையை சொல்வதற்கு வார்த்தை இல்லை. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து தான் பாருங்களேன்!

இதையும் படிக்கலாமே
இடது கையால் தானம் செய்துவிட்டால் என்ன நடக்கும்? ஏன் வலது கையால் தானம் செய்ய வேண்டும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Arugampul vinayagar. Arugampul palangal. Arugampul payangal Tamil. Arugampul in Tamil. Vinayagar arugampul.