உங்கள் ஆசைகள் நிறைவேற, வேண்டியது பலிக்க, பாவங்கள் தீர கணநாயகாஷ்டகம் எப்படி படிக்கணும் என்று தெரியுமா?

arasa-maram-pray-vinayagar
- Advertisement -

வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறவும், பாவங்கள் தீர்ந்து ஆசைப்பட்டதை அடையவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக நினைத்து மனதார வழிபட்டு வர வேண்டும். எந்த ஒரு விஷயத்தை துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்ட பின்பே துவங்கப்படுகிறது. இதனால் தடையில்லாமல் செய்யப் போகிற காரியம் வெற்றி அடையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த வகையில் நம்முடைய ஆசைகள் நிறைவேறுவதற்கு, பாவங்கள் நீங்கி நற்கதி அடைவதற்கு இந்த கணநாயகாஷ்டகத்தை எப்படி படிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

விநாயகருடைய மந்திரங்களில் மிக முக்கியமான மந்திரமாக இருக்க கூடிய இந்த கணநாயகாஷ்டகம் ரொம்பவே சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி மற்றும் புதன் கிழமைகளில் வெள்ளருக்கு மற்றும் அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை வழிபட எத்தகைய வேண்டுதலும் வேண்டியபடி தடையில்லாமல் பலிக்கும் என்கிறது ஆன்மீகம்.

- Advertisement -

விநாயகருக்கும், அரச மரத்திற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. அரச மர இலைகள் ஒவ்வொன்றிலும் விநாயகருடைய அருள் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே அரச இலைகள் இருபத்தி ஒன்று என்கிற எண்ணிக்கையில் வைத்து ஒவ்வொரு புதன்கிழமையும், விநாயகரை நினைத்து நெய் தீபம் ஏற்றி மோதகம் அல்லது சுண்டல் போன்றவற்றை செய்து வைத்து வழிபட்டு இந்த கணநாயகாஷ்டகத்தை வாசித்து வந்தால் தடை இல்லாத வெற்றியை அடையலாம். எந்த ஒரு விஷயத்திலும் தடங்கல் ஏற்படாமல் இருக்க விநாயகர் வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தடைகளை தகர்த்து எறிந்து வெற்றி மேல் வெற்றி அடைய வெற்றி விநாயகரையும், இந்த கணநாயகாஷ்டகத்தையும் தொடர்ந்து இப்படி படித்து பயன்பெறலாம்.

கணநாயகாஷ்டகம் மந்திரம்:
ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம்
மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம்
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

- Advertisement -

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம்
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

கஜவக்த்ரம் ஸுரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம்
பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம்
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம்
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர:
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி!!!

- Advertisement -