விருச்சிகம் ராசியினருக்கான பொது பரிகாரங்கள்

ஜோதிட சாஸ்திர படி நவகிரகங்களில் வீர உணர்விற்கும், நியாய தர்மங்களுக்கும் அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். ஜாதகத்தில் இருக்கும் 12 ராசிகளில் “மேஷம், விருச்சிகம்” செவ்வாய் பகவானுக்குரிய ராசியாகவும், மகரம் செவ்வாய் பகவான் உச்சமடையும் ராசியாகவும் இருக்கிறது. இதில் செவ்வாய் பகவான் ஆதிபத்யம் கொண்ட “விருச்சிகம்” ராசி பற்றியும், அந்த ராசிகாரர்கள் வாழ்வில் பல சிறப்பான பலன்களை பெற செய்ய வேண்டிய பரிகார முறைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

sevvai

12 ராசிகளில் எட்டாவது ராசியாக வருவது விருச்சிகம் ராசியாகும். விருச்சிகம் என்றால் சம்ஸ்கிருத மொழியில் தேள் என்பதை குறிக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் பொதுவாக முன்கோபம் குணத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருக்கிறார்கள். கோபம் வந்து விட்டால் யாராக இருந்தாலும் கடும் வார்த்தைகளால் தேள் போல் கொட்டிவிடுவர். இந்த ராசியினர் பெரும்பாலானோருக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நெருப்பு, போர் போன்றவற்றிற்கு காரகனாக இருக்கும் செவ்வாய் பகவான் இந்த விருச்சிக ராசியின் அதிபதியாக இருப்பதால், இவர்களுக்கு கோப குணம் அதிகம் உண்டாகிறது. விருச்சிக ராசியினர் தங்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் பெற கீழ்கண்ட பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வருவது சிறப்பு.

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் பொருளாதார மேன்மையையும், மிகுந்த அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவதால் வாழ்வில் பல நல்ல மாறுதல்கள் உண்டாகும். மாதந்தோறும் வரும் சஷ்டி, கிருத்திகை தினங்களில் முருகப்பெருமானை வழிபட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது செந்தூரம் சாற்றி வழிபடுவதால் உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற துரதிர்ஷ்டங்கள், தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

Hanuman

உங்கள் வீடுகள் அல்லது கோயில்களில் இருக்கும் எறும்பு புற்றுகளில் இருக்கும் எறும்புகளுக்கு வெல்லம் கலந்த அரிசி, அரிசி மாவு போன்றவற்றை உணவாக கொடுப்பது நல்லது. துறவிகள், யாசகர்கள் போன்றவர்களுக்கு ரொட்டி மற்றும் இனிப்பான உணவுகளை தானமளிப்பது உங்களின் கர்ம வினை பாதிப்புகளை நீக்கும். வயதால் மூத்தவர்களுக்கு மரியாதை அளிப்பதும், அவர்களின் ஆசிகளை பெறுவதும் உங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும். வாரத்தில் செவ்வாய் கிழமைகளில் அரச மரத்தை வலம் வந்து வணங்குவது நல்லது.

2019 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே:
துலாம் ராசியினருக்கான பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Viruchigam rasi pariharam in Tamil. It is also called Jothida rasi pariharam in Tamil or Rasi pariharam in Tamil or Viruchigam rasi in Tamil.