நம் விதியை பற்றி சொல்லும் ரேகை பற்றி தெரியுமா ?

kai regai
- Advertisement -

இந்த உலகில் அனைத்தையும் படைத்தவர் இறைவன் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. அப்படி மனிதர்களை படைத்த இறைவன் அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள் என்பதை முன்பே தீர்மானித்து விடுவதாக ஜோதிட சாத்திரம் கூறுகிறது. அப்படி ஒரு மனிதனின் விதியை பற்றி கூறும் “விதி ரேகையை” பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

vithi regai

  1. இந்த விதி ரேகை ஓரு மனிதனின் கையின் மணிக்கட்டிலிருந்து தொடங்கி நடுவிரலின் அடிப்பகுதியை நோக்கி செல்லும் ரேகை “விதி” ரேகையாகும். அதை மேலே உள்ள அப்படத்தில் காணலாம்
  2. இந்த விதி ரேகை நேராகவும், நன்கு அழுத்தமாகவும், நல்ல நிறத்தோடு இருந்தால் அந்த நபருக்கு கவலையற்ற வாழ்க்கையும், நிறைய செல்வத்தை பெறும் அமைப்பும் உண்டாகும்.
  3. இந்த விதி ரேகை பக்கத்திலிருக்கும் ஆயுள் ரேகையுடன் பின்னிப் பிணைந்திருந்தால் அந்த நபருக்கு சீரான செல்வமும், உற்றார் உறவினர்களுடன் என்றும் சேர்ந்து வாழக்கூடிய அமைப்பும் உண்டாகும்.
  4. இந்த விதி ரேகையில் கீழ்நோக்கிய கிளை ரேகைகள் இருந்தால் சற்று கடினமாக உழைத்து பொருளீட்டக்கூடிய நிலை ஏற்படும்.
  5. இந்த விதி ரேகை ஆட்காட்டி விரலின் அடிப்பகுதி வரை சென்றால் அந்த நபர் நேர்மை குணம் கொண்டவராக இருப்பார்.
  6. இந்த ரேகை நடுவிரலின் அடிப்பகுதி வரை சென்றால் அவர் மிகப்பெரும் செல்வந்தராக இருப்பார்.
  7. இந்த விதி ரேகை மோதிர விரலின் அடிப்பகுதி வரை சென்றால் அவர் பொதுமக்களிடம் புகழ் பெற்று செல்வாக்கு ஈட்டுவார்.
  8. இந்த ரேகை சுண்டு விரலின் அடிப்பகுதி வரை சென்றால் அவர் மிகச்சிறந்த கல்விமானாக இருப்பார். அதன் மூலம் அவர் செல்வத்தை ஈட்டுவார்.

இதையும் படிக்கலாமே:
கைரேகைப்படி கோடீஸ்வர யோகம் யாருக்கெல்லாம் உண்டு தெரியுமா ?

- Advertisement -

இது போன்ற மேலும் பல கை ரேகை ஜோதிடம் சார்ந்த தகவல்களை பெற எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -