ரொம்பவும் அழுக்கு படிந்த துணிகளை, இப்படி ஊற வைத்தால், கையில் துவைக்கும்போது, அழுக்கு சுலபமாக நீக்கிவிடும். மலிவான துணி பவுடரை கொண்டு ஊர வைத்தாலும் கூட!

cloth
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் நம்மில் நிறைய பேர் வாரத்திற்கு ஒரு முறை தான் துணிதுவைக்கும் வழக்கத்தை வைத்திருக்கின்றோம். சிலபேர் குறிப்பிட்ட சில துணிகளை மட்டும் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து எடுத்துக் கொள்வார்கள். கொஞ்சம் வேலைப்பாடு உள்ள துணிகளை, வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க முடியாது. உங்களுடைய வீட்டில் நீங்கள் கையில் துவைக்கும் துணிகளுக்கு இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க. இந்த முறையில் கையில் துவைக்கும் துணிகளை இப்படி ஊற வைத்து துவைத்தால், துணியில் இருக்கும் அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சோப்பு போட்டு, பிரஷ் போட்டு தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

cloth2

முதலில் அழுக்கு துணிகள் தலைகீழாக இருந்தால், சரியான பக்கம் இருக்குமாறு திருப்பிக்கொள்ள வேண்டும். சில பேர் மடிப்புகளோடு அழுக்குத் துணியை அப்படியே கழட்டி, அழுக்கு டப்பாவில் போட்டு வைத்திருப்பார்கள். மடிப்புகளோடு துணியை ஊற வைத்தால், அந்த இடத்தில் இருக்கும் அழுக்கு சுலபமாக நீங்காது.

- Advertisement -

இப்போது அழுக்கு துணிகளுக்கு ஏற்ப பக்கெட்டில் தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை பயன் படுத்திக் கொண்டால் இன்னும் நல்லது. சுடு தண்ணீர் இல்லை என்றாலும் பரவாயில்லை. சாதாரணத் தண்ணீரில் சோப்புத்தூள் எதுவுமே போடாமல், முதலில் அழுக்குத் துணிகளையெல்லாம், வெறும் தண்ணீரில் மூழ்க வைத்து, 15 நிமிடங்கள் ஊற வைத்துவிட வேண்டும்.

cloth1

இப்போது துணிகளில் உள்ள அழுக்கு மொத்தமும் தண்ணீரில் ஊறி, நீங்கள் ஊற்றி வைத்த தண்ணீரே கருப்பு நிறமாக மாறி இருக்கும். துணியில் இருக்கும் அழுக்கு பாதி அளவு வெளியேறி இருக்கும். துணிகளில் படிந்திருக்கும் அழுக்கு நன்றாக ஊறியிருக்கும். இரண்டாவதாக பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி சோப்பு பவுடர் அல்லது துணி துவைக்கும் இடத்தில் போட்டு நன்றாக கரைத்து விட்டு அதன் பின்பு, சாதாரண தண்ணீரில் ஊற வைத்திருக்கும் துணியை சோப்பு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

- Advertisement -

20 நிமிடங்கள் சோப்பு தண்ணீரில் ஊறிய துணிகளை லேசாக உங்கள் கைகளால் குமிக்கி துவைத்தாலே போதும். அழுக்கு மொத்தமும் நீங்கிவிடும். காலர் பகுதிகளில் சோப்பு போட்டு அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம். வெறும் பிரஷ்ஷை கொண்டு லேசாக தேய்த்தாலே, காலரில் இருக்கும் அழுக்கு, கை பகுதிகளில் இருக்கும் அழுக்கு, கால் பகுதிகளில் இருக்கும் அழுக்கு, இவை அனைத்தும் சுலபமாக நீக்கிவிடும்.

cloth3

விலை உயர்வான துணி துவைக்கும் பவுடர், லிக்விட் இவைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, சாதாரணமாக கிடைக்கும் துணி பவுடர்களை பயன்படுத்தினால் கூட இந்த முறையில் துணிகளை ஊற வைத்து துவைப்பவர்களுக்கு துணியும் பளிச் பளிச்சென மாறும். வேலைப்பளுவும் குறையும். பணமும் மிச்சமாகும். கை வலி வருவதற்கு வாய்ப்பு இல்லை. முதலில் துணிகளை சாதாரண தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு சோப்பு பவுடர் கலந்த தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் அவ்வளவுதான் ‌.உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ஒருமுறை உங்களுடைய வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளை தொடர்ந்து தானம் கொடுத்து வந்தால், சகல தோஷமும் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே செல்லும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -