பக்கெட்டில் போட்ட அழுக்கு துணிகளை, உங்கள் கை படாமல் அப்படியே வாஷிங் மெஷினில் கொட்டினாலும், கையில் துவைத்தது போல பளிச் பளிச் வெண்மை கிடைக்கும். இந்த ஒரு ட்ரிக்ஸ் யூஸ் பண்ணி பாருங்க!

washing-mechin
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த துணிகளை அழுக்குப் போக துவைப்பது என்பது பெரிய சிரமமான விஷயம். வீட்டில் வாஷிங் மெஷின் இருந்தாலும் சரி, சோப்பு போட்டு பிரஷ் போட்டு ஊறவைத்து அதன் பின்பு வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை, கையாலேயே துவைத்து விட்டு போகலாம் என்ற சலிப்பு தட்டிவிடும். சரி, வாஷிங் மெஷினிலேயே கையில் துவைப்பது போல பளிச் பளிச் வெண்மையை பெறவேண்டுமென்றால் என்ன செய்யலாம்? இந்த கேள்விக்கான ஒரு பதிலை, இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

washing-mechine

ஒண்ணுமே இல்லைங்க! சின்ன ட்ரிக்தா இது. இந்த டிப்ஸை படித்துவிட்டு நீங்களே யோசிப்பீங்க. இவ்வளவுதானா விஷயம்! அப்படின்னு. முதலில் வாஷிங்மெஷினில் பத்திலிருந்து பதினைந்து துணிகளை போட்டோம் என்றால், ஒரு ஸ்பூன் அளவு துணி துவைக்கும் பவுடரை போட்டு, தண்ணீரை 5ல் செட் பண்ணி விடுவோம் அல்லவா?

- Advertisement -

இதே பத்து பதினைந்து துணிகளை, கையில் துவைப்பதற்கு, ஊற வைக்க வேண்டும் என்றால், 1 பக்கெட் தண்ணீர் தான் தேவைப்படும். ஒரு பக்கெட் தண்ணீரில் 1 ஸ்பூன் அளவு சோப்பு பவுடரை போட்டு துணிகளை ஊற வைத்தால் அழுக்கு சுலபமாக நீங்கி விடும். 5 பக்கெட் தண்ணீருக்கு எப்படி 1 ஸ்பூன் பவுடரில் அழுக்கு போகும்?

washing-mechin1

முதலில் வாஷிங் மெஷினில் துணியை போட்டு விடுங்கள். 2 ஸ்பூன் அளவு பவுடர் கட்டாயம் போட வேண்டும். வாஷிங்மெஷினில் தண்ணீரை 3றில் வைத்துவிட்டு, வாஷிங் மெஷினிலேலையே soak என்ற ஆப்சன் இருக்கும். அதாவது ஊறவைப்பது. முதலில் தண்ணீரை 3 லேயே வைத்துவிட்டு துணிகளை வாஷிங் மெஷினில் ஊற வைத்துவிட்டு, உங்கள் வாஷிங் மெஷின் soak ஆப்ஷனில் இருக்கும் போது, வாஷிங்மெஷினை pause அல்லது off செய்து வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்போது உங்கள் துணி குறைவான தண்ணீரில், அளவான பவுடரோடு வாஷிங்மெஷினில் உருட்டும். 10 நிமிடங்கள் கழித்து, மீண்டும் உங்களது வாஷிங் மெஷினை on செய்து எப்பவும் போல தண்ணீரை 5 ல் வைத்து எப்போதும் போல துவைப்பதற்கு பட்டனை செட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்கள் துணியில் இருக்கும் அழுக்கு நன்றாக போய் இருக்கும் வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். ஒரே ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

washing-mechin2

வாஷிங் மெஷினிலேயே குறைவான அளவு தண்ணீரை வைத்து, ஊற வைக்க வேண்டும். அவ்வளவு தாங்க. அதன் பின்பு எப்போதும் போல நிறைய தண்ணீரை ஐந்தில் வைத்துவிட்டு, வழக்கம்போல்  துவைத்துக்கொள்ளப் போகிறீர்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் ஊறவைக்கும் நேரத்தை கூட நீங்கள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். வாஷிங் மெஷினில் 10 நிமிடங்கள் வரைதான் சாதாரணமாக ஊறவைக்கும். நீங்கள் தேவைப்பட்டால் 20 நிமிடங்கள் ஊறவைத்து வைத்து விட்டுக் கூட, அதன்பின்பு வாஷிங் மெஷினை on செய்யலாம். ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு திருப்தியா இருந்தா ஃபாலோ பண்ணிக்கோங்க.

இதையும் படிக்கலாமே
கிரைண்டரில் மாவு அரைக்கும் பொழுது பழைய வாசனை போக, கிரைண்டர் கழுவும் பொழுது இப்படி கழுவிப் பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -