புதிய ஆடைகள் மற்றும் தங்கம் நிறைய சேர என்ன செய்ய வேண்டும் ?

amman2

நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த பல சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு பின்பு சில விடயங்கள் ஒளிந்துள்ளன. அதை நாம் முறையாக செய்தாலே நமது வாழ்வில் செல்வமும் நிம்மதியும் தானாக பெருகும். அந்த வகையில் புதிய ஆடைகள் பெருகுவதற்கும், தங்கம் பெருகுவதற்கும் நம் முன்னோர்கள் சில சாஸ்திரங்களை சொல்லிக்கொடுத்துள்ளனர். அதை பற்றி இப்போது பார்ப்போம்.

gold

நாம் கடைக்கு சென்று வாங்கி வரும் ஆடைகள் அனைத்தையும் நாம் தான் முதலில் உடுத்துகிறோமா என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான். அந்த ஆடையை தைத்தவர் அதன் அளவு சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்க அதை உடுத்தி இருக்கலாம் அல்லது கடையில் அதை வேறு யாரவது உடுத்தி பார்த்திருக்கலாம். இந்த மாதிரியான செயல்களால் அந்த ஆடைக்கு சில தோஷங்கள் ஏற்பட்டிருக்கும்.

ஆடைக்கு தோஷமா என்று கேட்காதீர்கள். ஆடைக்கும் நிச்சயம் தோஷம் இருக்கிறது. இந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காகவே புத்தாடை அணியும்போது அதன் ஓரங்களில் மஞ்சள் தடவி அணிய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இப்படி செய்வதால் அந்த அடைக்கு மங்களம் சேருவதோடு அதை அணியும் நமக்கும் மங்களம் பெருகும். இதனால் புதிய ஆடைகள் நம்மிடம் சேரும்.


உங்களுக்கு நேரம் இருந்தால் இடத்தியும் படியுங்கள்:
எந்த நாளில் விளக்கை துலக்கினால் என்ன நடக்கும் தெரியுமா ?


ஆடைக்கு தோஷம் இருப்பது போல தங்க நகைகளுக்கும் தோஷம் இருக்கவே செய்கிறது. ஏன் என்றால் அதையும் கடைகளில் பலர் அணிந்துபார்க்கின்றனர். ஆகையால் புதிதாக தங்கம் வாங்கியவுடன் அதை ஒரு வெள்ளை துணியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ மடித்து சிறுது நேரம் உப்பில் புதைத்து வைத்தால் தங்கத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் விலகும். இதனால் வீட்டில் தங்கம் சேரும்.