குலோப் ஜாமுனை மைதா மாவில் செய்வதை விட இப்படி கோதுமை மாவில் ஒரு முறை செய்து பாருங்கள் அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்

gulab
- Advertisement -

பொதுவாக குலோப்ஜாமுன், பால் பவுடர், மைதா மாவு, அல்லது கடைகளில் கிடைக்கும் குலோப் ஜாமுன் மிக்ஸ் கொண்டு செய்யப்படுகிறது, ஆனால் நாம் வீட்டில் எப்போதும் இருக்கும் சப்பாத்திக்கு பயன்படுத்தக்கூடிய கோதுமை மாவைப் பயன்படுத்தி ஜாமுன் செய்யலாம். சுவை குலோப்ஜாமுன் போன்றே இருக்கும். மற்ற பவுடர்களின் செய்வதை விட கோதுமை மாவில் செய்யும் குலோப் ஜாமுன் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை குழந்தைகளுக்கும் எந்த வித தயக்கமும் இல்லாமல் கொடுக்கலாம். இதனை செய்வதற்கு நேரமும் குறைவாகத்தான் செலவாகும். வாருங்கள் இப்படி சுவையான கோதுமை மாவு குலாப் ஜாமுனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப், நெய் – 6 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன், பால் பவுடர் – 4 ஸ்பூன், பால் – 1/4 கப், சர்க்கரை – 1 கப், ஏலக்காய் – 3, ஆரஞ்ச் கலர் – 1 சிட்டிகை, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
ஒரு கடாயில்  இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்,  அதனுடன் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.மீண்டும் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும் அல்லது கோதுமை மாவின் பச்சை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும். நன்கு வறுத்த பின்னர், ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும். கோதுமை மாவு ஆறிய பின்னர் பால் பவுடர்,  அரை ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் நெய், 1/4 கப் பால் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

மாவை பிசைந்த பின்னர்,  10 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, அதனை அடுப்பின் மீது வைத்து சூடு படுத்த வேண்டும். பிறகு தயாராக உள்ள மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் சேர்க்க வேண்டும். பிறகு மிதமான சூட்டில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.

- Advertisement -

பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே வைக்க வேண்டும். இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை கப் அல்லது சர்க்கரை முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரைப்பாகு  ஓரளவு திக்கானதும்,  மூன்று ஏலக்காயைத் தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிட்டிகை ஆரஞ்சு கலர் 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளவும். இப்போது வறுத்து வைத்துள்ள ஜாமூன்களை அதில் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலந்து 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின்னர் பரிமாறவும், சுவையான கோதுமை மாவு குலோப் ஜாமுன் தயாராகி விட்டது.

- Advertisement -