இந்த அடை செய்ய அரிசி ஊற வைத்து மாவு அரைத்து கஷ்டப்பட வேண்டாம். சட்டென 10 நிமிடத்தில் ஒரு அடை ரெசிபி உங்களுக்காக.

adai
- Advertisement -

அரிசி பருப்பு வகைகளை ஒன்றாகப் போட்டு ஊறவைத்து அரைத்து அதன் பின்புதான் அடை சுடவேண்டும். ஆனால், அந்த கஷ்டம் இனி தேவை இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் ரவை, கோதுமை மாவை வைத்து சுலபமான முறையில் ஒரு அடை ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த அடை மாவை சட்டென 10 நிமிடத்தில் செய்து விடலாம். ரொம்ப ரொம்ப ஈசியான சூப்பர் அடை ரெசிபியை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

adai2

ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ரவை – 1 கப், கோதுமை மாவு – 1 கப், பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் – 2, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 3, இஞ்சித் துருவல் – 2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை – 1/2 கைப்பிடி, புளிக்காத தயிர் – 1/2 கப், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, முதலில் ஊற்றி இருக்கும் தயிரில் மாவை நன்றாக பிசைந்து விட்டு, அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். (சப்பாத்தி மாவு பதத்திற்கு கட்டியாகவும் பிசைய கூடாது. அதே சமயம் தண்ணி ஆகவும் இருக்கக் கூடாது.)

- Advertisement -

கையில் எடுத்து இந்த மாவை வாழை இலையில் தட்டும் அளவிற்கு, மாவின் பதம் இருக்க வேண்டும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். பிசைந்த மாவை மூடி போட்டு 1/2 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். மாவு ஊரி வருவதற்குள், ஒரு வாழை இலை அல்லது பால் கவரை வெட்டி அதன் மேல் எண்ணெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

adai

மாவு நன்றாக ஊறியதும், மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, அந்த உருண்டைகளை எண்ணெய் தடவி வைத்திருக்கும் வாழையிலையில் மெல்லியதாக தட்டி அதை அப்படியே கையில் எடுத்து, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி மொறுமொறுவென பொன்னிறமாக மிதமான தீயில் சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான அடை தயார்.

- Advertisement -

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ந்ததும் தோசை கல்லில் கொஞ்சம் முதலில் எண்ணெய் தடவிக் கொண்டு, அதன் பின்பு ஒவ்வொரு அடையாக போட்டு சுட்டு எடுங்கள். மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் தான் மொறுமொறுவென வரும்.

adai1

இதை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி ஆகவும் சாப்பிடலாம். இரவு டின்னருக்கும் செய்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள சைடிஷ் கூட தேவையில்லை. தேவைப்பட்டால் தேங்காய் சட்னி வைத்து பரிமாறுங்கள். வெறும் 10 நிமிடத்தில் மாவைத் தயார் செய்து ஊற வைத்து, அடுத்த 10 நிமிடங்களில் இந்த அடையை சட்டென சுட்டு எடுத்து விடலாம். ஊற வைப்பதற்கு மட்டும் கொஞ்சம் நேரம் எடுக்கும். மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -