இந்த சிம்பிள் டிபன் ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா போதும். காலையில லேட்டான கூட அவசர அவசரமா சமைக்க வேண்டிய டென்ஷனே இல்லாம நிதானமா சமைக்கலாம்.

wheat rava pongal
- Advertisement -

இன்றைய அவசர காலக்கட்டத்தில் எல்லாவற்றையும் அவசர அவசரமாகத் தான் செய்ய வேண்டி உள்ளது. காலத்தின் வேகத்திற்கு ஏற்ப நாமும் ஓடியே ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம். இப்படியான அவசர சூழ்நிலையில் உணவு விஷயத்தில் நாம் எதையும் சரிவர சரியாக கடைப்பிடிக்க முடிவதில்லை. ஏதோ அவசரத்துக்கு சமைத்தோம் சாப்பிட்டோம் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். அப்படி அல்லாமல் காலை வேளையிலே மிகவும் சுலபமாக அதே நேரத்தில் ஒரு ஆரோக்கியமான உணவாக இந்த கோதுமை சம்பா ரவை பொங்கலை செய்து விடலாம். அது எப்படி என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த பொங்கல் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு கோதுமை சம்பா ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு கால் கப் பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அடுப்பில் குக்கர் வைத்து அதில் ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் பாசிப்பருப்பு சேர்த்து லேசாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ரவை ஓரளவிற்கு வறுபட்ட உடன் அதில் சம்பா ரவையை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். இப்போது இரண்டும் நன்றாக வறுபட்ட பிறகு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கால் ஸ்பூன் உப்பை சேர்த்து ஒரு முறை கலந்து மூன்று விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை கொஞ்சம் பெருங்காயம் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு, இந்த தாளிப்பை பொங்களில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இந்த தாளிப்பில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் முந்திரி பருப்பையும் சேர்த்துக் கொள்ளலாம் சுவை நன்றாக இருக்கும்.

- Advertisement -

இந்த பொங்கலுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். காலையில் அவசர அவசரமாக என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்புவதற்கு பதிலாக இது போன்ற ஆரோக்கியமாக அதே நேரத்தில் சுலபமாக செய்யக் கூடிய உணவை தயார் செய்து சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: ரொம்ப ரொம்ப ஈஸியா சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு வைக்கலாமா? அடிக்கிற வெயிலுக்கு சுட சுட சாதமும் இந்த மோர் குழம்பும் இருந்தால் போதும்.

இந்த பொங்கல் ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் இன்றே உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இதே முறையில் மற்ற தானியங்களை வைத்துக் கூட இந்த பொங்கலை செய்யலாம்.

- Advertisement -