ரொம்ப ரொம்ப ஈஸியாக கோதுமை மாவை வைத்து சூப்பரான இனிப்பு போண்டா சுடுவது எப்படி?

appam1
- Advertisement -

கோதுமை மாவை வைத்து மிக மிக சுவையாக இப்படியும் இனிப்பு போண்டா செய்யலாம். மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக இந்த போண்டாவை செய்து கொடுக்கலாம். குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்து விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் கூட இது. வாங்க நேரத்தைக் கடத்தாமல் இந்த இனிப்பு போண்டாவை எப்படி சுடுவது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு அகலமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 பழுத்த வாழைப்பழத்தை தோலுரித்து கொஞ்சம் சிறிய துண்டுகளாக வெட்டி போட்டுக்கொள்ள வேண்டும். இதோடு 3 டேபிள்ஸ்பூன் பொடி செய்த வெல்லத்தைப் போட்டு உங்கள் கையை கொண்டு வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து கொடுங்கள். வாழைப்பழமும் வெல்லமும் கலந்து தளதளவென பஞ்சாமிர்தம் போல நமக்கு கிடைத்திருக்கும்.

- Advertisement -

இதோடு ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, கோதுமை மாவு – 100 கிராம், சோடா உப்பு – 1/4 ஸ்பூன், சேர்த்து உங்கள் கையைக் கொண்டு நன்றாக பிசைந்து கொடுங்கள். தண்ணீர் ஊற்ற தேவை இருக்காது. வெல்லம் வாழைப்பழம் சேர்ந்த கலவையே உங்களுக்கு தண்ணீர் நன்றாக விடும். மாவை கையால் எடுத்து போண்டா போடும் அளவிற்கு மாவு சரியான பதத்தில் இருக்க வேண்டும்.

இறுதியாக இந்த மாவில் 1 டேபிள்ஸ்பூன் அளவு நெய்யை ஊற்றி பிசைந்து ஒரு மூடி போட்டு 1 மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பின்பு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு செய்து, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு இந்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக, அதாவது சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து அப்படியே எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டியது தான்.

- Advertisement -

அடுப்பை மிதமான தீயில் வைத்து தான் சுட்டு எடுக்க வேண்டும். இல்லையென்றால் போண்டா மேலே கருகிவிடும். உள்ளே வேகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மாவு ரொம்பவும் தண்ணியாக இருந்தால் எண்ணெய் நிறைய குடிக்கும். அதே சமயம் மாவு ரொம்பவும் கட்டியாக இருந்தால் உள்ளே வேகாதது போல தோன்றும். இட்லி மாவை விட கொஞ்சம் கெட்டியான அளவு இந்த போண்டா மாவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தாங்க. சுடச்சுட எடுத்து இந்த போண்டாவை பரிமாறினால் குழந்தைகள் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -