கோதுமை தோசை பிடிக்காதவர்களுக்கு கூட இப்படி செஞ்சா கோதுமை தோசை ஃபேவரட் ஆகிவிடுமே

- Advertisement -

கோதுமை தோசை | Godhumai dosai recipe

கோதுமை தோசையா? ஐயோ வேண்டாம் என்று சொல்பவர்களும் உண்டு. கோதுமையை வெறுமனே தோசை சுட்டுக் கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள் ஆனால் இது போல ஈசியாக கொஞ்சம் காய்கறிகளை நறுக்கி சேர்த்து செஞ்சு பாருங்க, யாருமே வேணாம் என்று சொல்ல மாட்டாங்க! கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. ரொம்ப ஈசியாக செய்யக்கூடிய காய்கறி கோதுமை தோசை ரெசிபி எப்படி தயாரிப்பது? அப்படின்னு தொடர்ந்து தெரிஞ்சுக்குவோம் வாங்க.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ஒரு கப், தயிர் – ஒரு கப், ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை – சிறிதளவு, துருவிய கேரட் – ஒன்று.

- Advertisement -

செய்முறை விளக்கம்

முதலில் கோதுமை தோசை செய்வதற்கு ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வறுத்த ரவை அல்லது வறுக்காத ரவை ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். அரை ஸ்பூன் அளவிற்கு சீரகத்தை பொடித்து சேருங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இதனுடன் ஒரு கப் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கோதுமை மாவு தோசை சுடுவதற்கு ஏற்ப கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு மற்ற காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய காய்கறிகள் அனைத்தும் மாவுடன் கலந்து அப்படியே தோசை வார்க்கலாம். அப்படி இல்லை என்றால் இவற்றை வதக்கியும் செய்யலாம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளையும், பச்சை மிளகாயையும் நறுக்கி சேருங்கள். பிறகு நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு லேசாக வதக்கிய பின்பு உங்கள் விருப்பமான காய்கறிகளையும் சேர்க்கலாம். கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், குடைமிளகாய், பீன்ஸ் என்று நீங்கள் எந்த காயையும் விரும்பியபடி ரொம்பவும் பொடிதாக நறுக்கி சேர்க்கலாம். இவை எல்லாம் லேசாக வதங்கி வந்த பின்பு மாவுடன் சேர்த்து அப்படியே தோசை வார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே:
அட இத்தனை நாள் இப்படி ஒரு டிஷ் இருக்கிறது தெரியாம போச்சே. இனி இட்லி, தோசை, சாதம் என எல்லாவற்றிக்கும் இது தான் சைடு டிஷ். வாங்க அது என்னனு தெரிஞ்சிக்கலாம்.

மாவுடன் சேர்க்காமல் தோசை மாவை தோசை கல்லில் நன்கு பரப்பி விட்ட பிறகு மேலே நீங்கள் தயார் செய்து வைத்துள்ள காய்கறி கலவையை தூவி கொள்ளலாம். பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒருபுறம் நன்கு வெந்த பின்பு மறுபுறம் திருப்பிப்போட்டு வேக வைத்து எடுக்கலாம். எப்படி செய்தாலும் இந்த காய்கறி கலந்த கோதுமை தோசை ரொம்பவே சுவையாக இருக்கும். யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டாங்க, இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. கூடவே கொஞ்சம் கெட்டி தேங்காய் சட்னியும், கார சட்னியும் வச்சு கொடுங்க, அபாரமாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -