எந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது தெரியுமா?

ஜாதகத்தில் பொதுப்பலன், ஜாதகக்காரரின் தனிப்பட்ட பலன் என இருவகையான பலன்களை கூறலாம். ஒருவருடைய ராசியை வைத்து எப்படி அவருடைய குணாதசியன்களை கூற முடியுமோ அதே போல் அவருடைய ராசியை வைத்து அவருக்கு அதிஷ்டத்தை வழங்கக்கூடிய நாட்களையும் கூற முடியும். வாருங்கள் ஒவ்வொரு ராசிக்கான அதிஷ்டமான நாட்களை பற்றி பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசி நண்பர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடிய நாளாகும். இந்த நாளில் நீங்கள் முக்கிய செயல்களை செய்தால் அதில் வெற்றி பெறுவதற்கு சாத்தியம் அதிகம். அதே போல் உங்களுடைய திறமைகளை யாருக்கேனும் நீங்கள் வெளிக்காட்ட நினைத்தால் அதை செய்வாய் கிழமையில் வெளிக்காட்டுங்கள்.

ரிஷபம்:


ரிஷப ராசி நண்பர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் அதிஷ்டத்தை தரக்கூடிய நாட்களாகும். திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்த காரியங்கள் எளிதில் முடியும். வெள்ளி கிழமைகளில் விரதம் இருப்பது உங்களுக்கு மேலும் அதிஷ்டத்தை உண்டாக்கும்.

- Advertisement -

மிதுனம்:

மிதுன ராசி நண்பர்களுக்கு புதன் கிழமை அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய நாளாகும். நீங்கள் எந்த ஒரு புதிய செயலையும் புதன்கிழமை தைரியமாக மேற்கொள்ளலாம். அது உங்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும்.

கடகம்:

கடக ராசி நண்பர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் அதிஷ்டத்தை தரக்கூடிய நாட்களாகும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் இன்பத்தை அளிக்கும். திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி அடைய வாய்ப்புகள் அதிகம். புதன்கிழமை பயணங்கள் மற்றும் முதலீடுகளுக்கு உகந்தது. திங்கட்கிழமை நீங்கள் விரதம் இருந்தால் உங்கள் வாழ்க்கை நிலை உயரும்.

சிம்மம்:

சிம்ம ராசி நண்பர்களுக்கு பொதுவாக ஞாயிற்று கிழமை அதிஷ்டம் தரக்கூடிய நாளாகும். இந்நாளில் உங்களது திறமை முழுமையாக வெளிப்படும். ஆகையால் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் வெற்றி உங்களுக்கு பரிசாக கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசி நண்பர்களுக்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களும் அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடிய நாட்களாகும். செய்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீங்கள் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.

துலாம்:

துலாம் ராசி நண்பர்களுக்கு வெள்ளிக்கிழமை உயர்வை தரக்கூடிய நாளாகும். இந்த நாளில் உங்களுடைய நடுநிலையான மனோபாவம் மக்களிடம் உங்களுக்கு நல்ல புகழை வாங்கித் தரும்.

விருச்சிகம்:

திங்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களும் விருச்சிக ராசி நண்பர்களுக்கு சிறந்த நாட்களாகும். இந்த நாட்களில் நீங்கள் நினைத்த காரியங்களை முடிக்க சாத்தியம் அதிகம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் முக்கிய விடயங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

தனுசு:

தனுசு ராசி நண்பர்களுக்கு வியாழக்கிழமை அதிஷ்டம் தரக்கூடிய நாளாகும். இந்நாளில் உங்களது திறமை முழுமையாக புலப்படும். எனவே நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கும் காரியங்களை இந்நாளில் மேற்கொள்வது வெற்றியைத் தரும்.

மகரம்:

மகர ராசி நண்பர்களுக்கு சனிக்கிழமை மிக சிறந்த நாளாகும். இந்த நாளில் பொதுவாக நீங்கள் மிகவும் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படக்கூடும். அதனால் வெற்றி உங்களை தானாய் அன்று தேடி வரும்.

கும்பம்:

கும்ப ராசி நண்பர்களுக்கு திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களும் அதிஷ்டம் தரக்கூடிய நாட்களாகும். இந்த நாட்களில் நீங்கள் புதிய முறைச்சியை மேற்கொள்ளலாம். புதன் மற்றும் சனி கிழமைகளில் உங்களுக்கு நிதானம் தேவை.

மீனம்:

மீன ராசி நண்பர்களுக்கு வியாழக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெறுவதற்கு சாத்தியம் மிக அதிகம்.

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் ரீதியான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.