விஷ்ணுவின் அவதாரத்தில் மிகச் சிறந்த அவதாரம் எது தெரியுமா ?

krishnar

பகவான் விஷ்ணுவோ பல காரணங்களுக்காக கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் இப்படி பல அவதாரங்களை எடுத்துள்ளார். இதில் எது சிறந்த அவதாரம் என்ற சந்தேகம் ஒரு பக்தனுக்கு எழுந்தது. இதற்கான விடையை தேடி அவன் இடைக்காட்டுச் சித்தரிடம் சென்றான்.

vishnu

ஐயா, நீங்கள் ஒரு சிறந்த மகான் என்பதால் உணங்களிடம் ஒரு சந்தேகத்தை கேட்கவந்துள்ளேன் என்றான் அந்த பக்தன். இடைக்காடரோ சிரித்தபடியே என்ன உன் சந்தேகம் என கேட்க, தசாவதாரத்தில் சிறந்த அவதாரம் எது என கேட்டான்.

இடைக்காடரோ ‘ஏழை இடையன் இளிச்சவாயன்’ என்று கூறிவிட்டு எந்த இடத்தை விட்டு சென்றார். இதென்ன கொடுமை, நான் தப்பாய் ஏதும் கேட்டேனா? எதற்கு சித்தர் தன்னை தானே தாழ்த்திக்கொள்வது போல கூறிவிட்டு போகிறார் என்று நினைத்தபடியே அவனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

இடைக்காடர் சொன்ன வார்த்தைகள் மட்டும் அவன் மனதில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது. இதை பற்றி அவன் தீவிரமாக யோசிக்க துவங்கினான். ஒருநாள் இடைக்காடர் சொன்ன வாக்கியத்தில் உள்ள சொற்களை தனித் தனியாக பிரித்துப்பார்த்தான். அவன் சந்தேகத்திற்கான விடை கிடைத்தது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அமெரிக்க விஞ்ஞானிகளை வாய் பிளக்கவைத்த நம் காயத்திரி மந்திரம்

ஏழை – ராஜ வம்சத்தில் பிறந்து பின் பல ஆண்டுகள் ஏழையாக வாழ்ந்தவர் ஸ்ரீ ராமர்.
இடையன் – இது கிருஷ்ணாவதாரத்தை குறிக்கிறது.
இளிச்சவாயன் – இது நரசிம்ம அவதாரத்தை குறிக்கிறது.

krishna

அடடே ஒரே வாக்கியத்தில் அற்புதமான விளக்கத்தை அளித்துள்ளாரே இடைக்காடர் என்று நினைத்து அவன் மனம் மகிழ்ந்தான்.

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான சிறு கதைகள், குட்டி கதைகள் மற்றும் தத்துவ கதைகளை உடனுக்குடன் பெற எங்களுடைய மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து எங்களோடு இணைந்திருங்கள்.