குடும்பத்தில் உள்ளவர்களில் யாருடைய ஜாதகத்திற்கு பலன் அதிகம் தெரியுமா ?

5359
astrology
- விளம்பரம் -

ஒருவருக்கு திருமணம் ஆகாதவரை அவரவர் ஜாதகத்திற்கே பலன் அதிகம். ஆனால் திருமணம் ஆகி குடும்பம் என்று ஆனா பிறகு அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்திற்கே பலன் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுவும் குழுந்தை பிறப்பதற்கு முன்பு வரை தான்.

astrology-wheel

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தையின் ஜாதகத்திற்கே பலன் அதிகம். உதாரணத்திற்கு தந்தையின் ஜாதகத்தை பொறுத்தவரை அவருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பிள்ளையின் ஜாதகப்படி சொந்த வீட்டில் தான் வாழவேண்டும் என்று இருந்தால், அவர்கள் வீடு வாங்கி விடுவார்கள்.

- Advertisement -

சில நேரங்களில் தந்தையும் பிள்ளைகளும், வேலை காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ பிறந்து வாழ்வார்கள். இதற்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது பிள்ளைகளின் ஜாதகம் தான்.

astrology-wheel

பிள்ளையின் ஜாததம் ஒருவரை கோடீஸ்வரனாகவும், கடன்காரனாகவும் மற்றும் வல்லமை கொண்டது. அதேபோல பரிகாரம் செய்ய நினைப்பவர்களும் பிள்ளைகளின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஏற்றாற்போல பரிகாரத்தை செய்யலாம். இதனால் தலைமுறை தலைமுறையாய் தொடரும் தோஷங்கள் விலகும்.

astrology wheel

தாய் தந்தையர்களுக்கு ஜாதகம் இல்லை என்றாலும் பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்து 85 % சதவிகிதம் பெற்றோர்களின் வாழ்க்கையை கணிக்க முடியும் என்கிறார்கள் ஜோதிடர்கள். ஆக குடும்பத்தில் உள்ள அனைவரின் வழக்கையையும் பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்து கணிக்கலாம்.

Advertisement