எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா ?

astrology

அசுவினி:

அசுவினி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சரஸ்வதி தேவி. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சரஸ்வதியை வணங்கி பால் ஏடை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

saraswathi

பரணி:

பரணி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் துர்கை. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை அம்மனை வணங்கி வெல்ல அப்பத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

கிருத்திகை:

- Advertisement -

கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகன். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகனை வணங்கி தயிர்சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

ரோகிணி:

ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் பிரம்மா. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரம்மாவை வணங்கி பால் சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

brahma

மிருகசீரிஷம்:

மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீசந்திர சூடேஸ்வரன். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீசந்திர சூடேஸ்வரனை வணங்கி பாயசத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் அதிஷ்டம் பெறுவார்.

திருவாதிரை:

திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சிவபெருமான். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானை விணங்கி வில்வத்தால் அர்ச்சனை செய்து நெய்யை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

புனர்பூசம்:

புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீராமபிரான் . ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீராமனை வணங்கி வெல்ல சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் நன்மை பெறுவார்.

raman

பூசம்:

பூசம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் தட்சிணாமூர்த்தி . ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கி பச்சை பயிறு பாயாசத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

ஆயில்யம்:

ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஆதிசேஷன் . ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷனை வணங்கி கொழுக்கட்டையை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

மகம்:

மகம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சூர்யநாராயணன் . ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூர்யநாராயணனை வணங்கி அதிரசம், வெள்ளம் பட்சணம் ஆகியவற்றை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

vishnu

பூரம்:

பூரம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் காஞ்சி காமாட்சி. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காமாட்சியை வணங்கி புளியோதரை, தேங்காய்ச்சாதம் ஆகியவற்றை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

உத்திரம்:

உத்திரம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் மகாலட்சுமி. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாலட்சுமியை வணங்கி எள் சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

அஸ்தம்:

அஸ்தம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீகாயத்ரி தேவியை வணங்கி அப்பத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

சித்திரை:

சித்திரை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சக்கரத்தாழ்வார். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சக்கரத்தாழ்வாரை வணங்கி கொழுக்கட்டையை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

sakarathalvar

சுவாதி:

சுவாதி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி . ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நரசிம்மரை வணங்கி தயிர்சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

விசாகம்:

விசாகம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகன். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகனை வணங்கி வெல்லத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

அனுஷம்:

அனுஷம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீலட்சுமி நாராயணன். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லட்சுமி நாராயணரை வணங்கி நெய் பாயாசத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

lakshmi narayanar

கேட்டை:

கேட்டை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் வராக பெருமாள். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வராக பெருமாளை வணங்கி புளியோதரை, தேங்காய் சாதம் போன்றவற்றை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

மூலம்:

மூலம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஆஞ்சநேயர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆஞ்சநேயரை வணங்கி தயிர் வடையை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்

பூராடம்:

பூராடம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஜலகண்டேஸ்வரர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜலகண்டேஸ்வரரை வணங்கி பால் ஏடை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

உத்திராடம்:

உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் விநாயகர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகரை வணங்கி புளியோதரை, தேங்காய் சாதம் போன்ற கலவை சாதங்களை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

vinayagar

திருவோணம்:

திருவோணம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் மகாவிஷ்ணு. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாவிஷ்ணுவை வணங்கி அக்கார அடிசலை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

அவிட்டம்:

அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் அனந்தபத்மநாபர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனந்தபத்மநாபரை வணங்கி பாயசத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

சதயம்:

சதயம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஆஞ்சநேயர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆஞ்சநேயரை வணங்கி நெய் கலந்த இனிப்பை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

hanuman

பூரட்டாதி:

பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீலட்சுமி குபேரரை வணங்கி தயிர் சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

உத்திரட்டாதி:

உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் காமதேனு. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காமதேனுவை வணங்கி வெல்ல சாதத்தை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.

ரேவதி:

ரேவதி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் ஸ்ரீரங்கநாதர். ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீரங்கநாதரை வணங்கி கரும்புச்சாறை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார்.