எந்த நட்சத்திரக்கார்கள் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கை சிறக்கும் தெரியுமா?

Astrology
- Advertisement -

அசுவினி:

aswini

அசுவினி நட்சத்திரக்காரர்களின் நான்கு பாதங்களின் பரிகாரம்:

- Advertisement -

அசுவினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள்:
அனைத்து இடர்களும் தீர, எல்லாவற்றிலும் வெற்றியடைய திருச்செந்தூர் முருகப் பெருமானை சஷ்டி திதிகளில் சென்று வணங்குவது நல்லது.

அசுவினி 2 -ம் பாதம்:
கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஒப்பில்லாப் பெருமாளை ஏகாதசி திதியில் சென்று வணங்குதல் நலம்.

- Advertisement -

அசுவினி  3 – ம் பாதம்:
திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் கோயிலில் அருள்பாலிக்கும் பிரயோகச் சக்கரம் ஏந்திய ஸ்ரீவரதராஜப் பெருமாளை இவர்கள் வணங்கலாம்.

அசுவினி 4- ம் பாதம்: 
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அருள் பாலிக்கும்  ஸ்ரீ வராஹி அம்மனை வணங்குதல் நலம்.

- Advertisement -

பரணி:
barani

பரணி நட்சத்திரக்காரர்களின் நான்கு பாதங்களின் பரிகாரம்:

முதல் பாதம்:
திருத்தணி மேற்கே அமைந்திருக்கும் வள்ளிமலையில் இச்சா சக்தி வடிவான ஸ்ரீ வள்ளியம்மையையும் ஸ்ரீ முருகப் பெருமானையும் நட்சத்திர நாளில் சென்று வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம்:
சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகனகவல்லித் தாயார் சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாளை அமாவாசை திதியில் சென்று வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம்:
மதுரைக்கு அருகிலுள்ள அழகர் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீஅழகர் பெருமாளையும், ஸ்ரீசுதர்சன மூர்த்தியையும் சென்று தரிசிப்பது நல்லது.

நான்காம் பாதம்:
சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூரில் வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு முருகப் பெருமானையும், ஸ்ரீசிதம்பர சுவாமிகளையும் வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

கார்த்திகை :

karthigai

கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் நான்கு பாதங்களின் பரிகாரம்:

கார்த்திகை முதல் பாதம் (மேஷ ராசி) பரிகாரம்: பழநி முருகனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

கார்த்திகை இரண்டாம் பாதம் (ரிஷப ராசி) பரிகாரம்: சென்னைக்கு மேற்கேயுள்ள திருவாலங்காடு என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீவண்டார் குழலியம்மை உடனுறை ஸ்ரீஊர்த்தாண்டேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குதல் நன்று.

கார்த்திகை மூன்றாம் பாதம் (ரிஷப ராசி) பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீரங்கநாதரையும், ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் ஏகாதசி திதியில் வணங்கினால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

கார்த்திகை நான்காம் பாதம் (ரிஷப ராசி) பரிகாரம்: திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் முருகனை வியாழக்கிழமையில் வணங்குவது நல்லது.

ரோகிணி:

rogini

ரோகிணி நட்சத்திரக்காரர்களின் நான்கு பாதங்களின் பரிகாரம்:

முதல் பாதம், பரிகாரம்:
செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருமலை வையாவூர், ஸ்ரீஅலர்மேல் மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை நவமி திதியில் சென்று வணங்குதல் நலம்.

2 – ம் பாதம், பரிகாரம்:
சின்னக் காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வரதராஜப் பெருமாளை சனிக்கிழமை வணங்குதல் நலம்.

3-ம் பாதம் , பரிகாரம்:
சென்னை நங்கநல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்குதல் நலம்.

4-ம் பாதம், பரிகாரம்:
மன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வாசுதேவனையும் ஸ்ரீ ராஜகோபாலனையும் வணங்குதல் நலம்.

மிருகசீரிஷம்:

mirugasiridam

மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாதங்களின் பரிகாரம்::

முதல் பாதம்: 
கும்பகோணம் அருகிலுள்ள, தந்தைக்குப் பாடம் சொன்ன தனயனான சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம்: 
சென்னை, பல்லாவரத்துக்கு அருகிலுள்ள, திருநீர்மலை ஸ்ரீரங்கநாதப் பெருமாளை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம்: 
சென்னை, திருவல்லிக்கேணி, ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளை புதன்கிழமைகளில் வணங்குவது நல்லது.

நான்காம் பாதம்:
சென்னைக்கு அருகிலுள்ள மதுராந்தகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜனகவல்லி உடனுறை ஏரிகாத்த ராமன் எனப்படும் ஸ்ரீ கோதண்டராமனை வணங்குவது நல்லது.

திருவாதிரை:

thiruvaadhirai

திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் நான்கு பாதங்களின் பரிகாரம்:

முதல் பாத பரிகாரம்:
திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அருணாசலேஸ்வரரை இந்த நட்சத்திர நாளில் வணங்குதல் நலம்.

இரண்டாம் பாத பரிகாரம்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ யோக பைரவரை அஷ்டமி திதியில் வணங்கினால், நல்ல பலன் கிடைக்கும்.

மூன்றாம் பாத பரிகாரம்:
சென்னை, திருவொற்றியூரில் ஆதிசேஷன் பூஜித்த ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீ படம்பக்கநாதர் மற்றும் மாணிக்கத் தியாகேஸ்வரரை வணங்குதல் நலம்.

நான்காம் பாதம் பரிகாரம்:
ராஜமன்னார் கோயிலுக்கு அருகிலுள்ள பாமணி (திருப்பாதாளேச்சுரம்) என்ற திருத்தலத்தில், ஆதிசேஷனும் நாகலோகத்தாரும் பூஜித்த ஸ்ரீ அமிர்தநாயகியம்மை உடனுறை ஸ்ரீ சர்ப்ப புரேஸ்வரரை வணங்குவது நல்லது.

புனர்பூசம்:

punarpusam

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

புனர்பூசம் நட்சத்திரம்  முதல் பாதம் பரிகாரம்:
விருத்தாசலம், மணவாள நல்லூரில் வீற்றிருக்கும்
கொளஞ்சியப்பரை உத்திர நட்சத்திர நாளில் வணங்குவது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரம் 2 -ம் பாதம் பரிகாரம்:
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானை  புனர்பூச நட்சத்திர நாளில் வணங்குதல் நலம்.

புனர்பூசம் நட்சத்திரம்  3- ம் பாதம் பரிகாரம்:
மதுரை ஸ்ரீசொக்கநாதர், மீனாட்சியம்மையை புதன்கிழமையில் வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரம் 4 – ம் பாதம் பரிகாரம்:
கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகையை திங்கட்கிழமையில் சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பூசம்:

pusam

பூசம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

முதல் பாதம் பரிகாரம்:
பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவதிகையில் வீற்றிருக்கும் ஸ்ரீ திரிபுர சுந்தரி உடனுறை திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம் பரிகாரம்:
சீர்காழிக்கு அருகிலுள்ள திருவெண்காட்டில் வீற்றிருக்கும் பிரம்மவித்யா நாயகி உடனுறை சுவேதாரண்யேஸ்வரரை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாத பரிகாரம்:
கன்னியாகுமரிக் கடலோரத்தில் வலது கையில் ஜப மாலையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ பகவதியம்மனை வணங்குதல் நலம்.

நான்காம் பாத பரிகாரம்:
அறுபடை வீடுகளில் முதலாவது வீடான திருப்பரங்குன்றத்தில் மணக்கோலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வணங்குதல் நலம்.

ஆயில்யம்:

aiyelyam

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

முதல் பாதம் பரிகாரம்:
ஸ்ரீரங்கத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கருடாழ்வாரையும் அரங்கநாயகி சமேத அரங்கநாதரையும், சக்கரத்தாழ்வாரையும் வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம் பரிகாரம்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீற்றிருக்கும் கோதைநாச்சியார், வடபத்ரசாயி (ரங்கமன்னார்) புஜங்கசயன், கருடாழ்வார் ஆகியோரை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம் பரிகாரம்:
திருப்புறம்பியத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ பிரளயம் காத்த பிள்ளையாரை தேனாபிஷேகம் நடைபெறும் விநாயக சதுர்த்தி திதியில் கண்டு வணங்குவது நல்லது.

நான்காம் பாதம் பரிகாரம்:
திருவாரூருக்கு அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீசுப்ரமண்யரை வணங்குதல் நலம்.

மகம்:

magam

மகம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

முதல் பாதம் பரிகாரம்:
விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரையும் ஸ்ரீவிபசித்து முனிவரையும் வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம் பரிகாரம்:
கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஆடுதுறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

மூன்றாம் பாதம் பரிகாரம்:
கன்னியாகுமரிக்கும் நாகர்கோவிலுக்கும் இடையே உள்ள சுசீந்திரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதாணுமாலயனை வணங்குதல் நலம்.

நான்காம் பாதம் பரிகாரம்:
புதுக்கோட்டை : பொன்னமராவதி வழித் தடத்தில் உள்ள பேரையூரில் எழுந்தருளியிருக்கும் நாகராஜன் வணங்கி பூஜித்த ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாகநாத சுவாமியை வணங்குவது நல்லது.

பூரம்:

puram

பூரம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

பூரம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:
சென்னை திருவான்மியூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மருந்தீஸ்வரரை வணங்குதல் நலம்.

பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் பரிகாரம்:
திருச்சிராப்பள்ளியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மட்டுவார் குழலியம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானேஸ்வரரை வணங்குதல் நலம்.

பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் பரிகாரம் :
திருநெல்வேலியில் தாமிர சபையில் வீற்றிருக்கும் ஸ்ரீகாந்திமதி அம்மை உடனுறை நெல்லையப்பரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும்.

பூரம் நட்சத்திரம் நான்காம் பாதம் பரிகாரம்:
பிள்ளையார்ப்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து தேய்பிறை சதுர்த்தசி திதியில் வணங்குதல் நலம்.

உத்திரம்:

uthiram

உத்திரம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

முதல் பாத பரிகாரம்:
காஞ்சிபுரத்துக்கு மேற்கே இருக்கும் திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரரை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாத பரிகாரம்:
வேலூருக்கு மேற்கே இருக்கும் விரிஞ்சிபுரத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ மரகதவல்லி உடனுறை ஸ்ரீ வழித்துணைநாதரை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம் பரிகாரம்:
ஸ்ரீ வைகுண்டத்துக்கு அருகிலுள்ள திருக்குளந்தை அதாவது பெருங்குளம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குளந்தைவல்லித் தாயார், ஸ்ரீ அலமேலுமங்கைத் தாயார் உடனுறை ஸ்ரீ சோரநாதப் பெருமானை வணங்குதல் நலம்.

நான்காம் பாத பரிகாரம்:
சென்னையில் உள்ள திருவலிதாயத்தில் (பாடி) ஸ்ரீ தாயம்மை உடனுறை ஸ்ரீ வல்லீசர் எனும் திருவலிதாயநாதரை வணங்குதல் நலம்.

அஸ்தம்:

astham

அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்குரிய பரிகாரம்:

முதல் பாத பரிகாரம்
ஈரோடுக்கு அருகிலுள்ள கொடுமுடியில் வீற்றிருக்கும் சௌந்தரநாயகி உடனுறை மகுடேஸ்வரரை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாத பரிகாரம்
மயிலாடுதுறையில் உள்ள திருஇந்தளூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ பரிமளரங்கநாயகி, ஸ்ரீ சந்திர சாபவிமோசனவல்லி உடனுறை ஸ்ரீ பரிமளரங்கநாதரை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாத பரிகாரம்
திருநாங்கூர், திருக்காவளம்பாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மடவரல்மங்கை மற்றும் ஸ்ரீ செங்கமலநாச்சியார் உடனுறை ஸ்ரீ கோபாலகிருஷ்ணனை வணங்குதல் நலம்.

நான்காம் பாத பரிகாரம்
திருக்கோஷ்டியூரில் அருள்பாலிக்கும் நாச்சியார் உடனுறை ஸ்ரீ உரகமெல்லணையானை வணங்குதல் நலம்.

சித்திரை:

chithirai

சித்திரை நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

முதல் பாத பரிகாரம்:
நாகப்பட்டினத்துக்கு அருகிலிருக்கும் சிக்கலில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிங்காரவேலரை கார்த்திகையில் வணங்குதல் நலம்.

இரண்டாம் பாத பரிகாரம்:
திருக்கண்ணபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ நீலமேகப் பெருமாளை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாத பரிகாரம்:
கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாளை வணங்குதல் நலம்.

நான்காம் பாத பரிகாரம்:
சிதம்பரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமானை அர்த்த ஜாம பூஜையின்போது வணங்குதல் நலம்.

சுவாதி:

swathi

சுவாதி நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

சுவாதி நட்சத்திர முதல் பாத பரிகாரம்:
காரைக்குடிக்கு மேற்கேயுள்ள கோவிலூரில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நெல்லைநாயகி உடனுறை ஸ்ரீ கொற்றவளீஸ்வரரை வணங்குதல் நலம்.

சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் பரிகாரம்:
அவிநாசியில் அருள்பாலிக்கும் பெருங்கருணை நாயகி உடனுறை ஸ்ரீ அவிநாசியப்பரை வணங்குதல் நலம்.

சுவாதி நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்
திருநெல்வேலியில் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் காந்திமதி சமேத நெல்லையப்பரை வணங்குதல் நலம்.

நான்காம் பாத பரிகாரம்
அரக்கோணத்துக்கு அருகில் சோளிங்கபுரத்தில் அருள்பாலிக்கும் சோளிங்கர் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வணங்குதல் நலம்.

விசாகம்:

visaagam

முதல் பாத பரிகாரம்
திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள எட்டிக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாத பரிகாரம்
ஓசூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரரை வணங்குதல் நலம்.

நான்காம் பாத பரிகாரம்
திருவனந்தபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஹரிலட்சுமி உடனுறை ஸ்ரீ அனந்தபத்மநாபனை ஏகாதசி திதியில் வணங்குதல் நலம்.

அனுஷம்:

anusham

அனுஷம் நட்சத்திரம் நான்கு பாத பரிகாரங்கள்:

அனுஷம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்
விருத்தாசலத்துக்கு அருகிலுள்ள ராஜேந்திரப் பட்டினத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீறாமுலையம்மன் உடனுறை திருக்குமரேசரை வணங்குதல் நலம்.

அனுஷம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
வரகுணமங்கை (நத்தம்) என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வரகுணவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ விஜயாசனப் பெருமானை வணங்குதல் நலம்.

அனுஷம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்
திருச்சிறுப்புலியூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் உடனுறை ஸ்ரீ சலசயனப் பெருமாளை வணங்குதல் நலம்.

கேட்டை:

ketai

கேட்டை நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

கேட்டை நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:
விராலிமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

கேட்டை நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
திருவேற்காட்டில் வீற்றிருக்கும் கருமாரியம்மனை வணங்குதல் நலம்.

கேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
உறையூரில் அருள்பொழியும் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாளை வணங்குதல் நலம்.

கேட்டை நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

மூலம்:

mulam

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய நான்கு பாத பரிகாரங்கள்:

முதல் பாத பரிகாரம்:
நாமக்கலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நாமகிரித் தாயார் உடனுறை, ஸ்ரீ நரசிம்மரையும், ஸ்ரீ ஆஞ்சநேயரையும் வணங்குதல் நலம்.

இரண்டாம் பாத பரிகாரம்:
திருநீர்மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அணிமாமலர் மங்கை உடனுறை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாளை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாத பரிகாரம்:
திருவதிகையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ வீரட்டேஸ்வரரை வணங்குதல் நலம்.

நான்காம் பாத பரிகாரம்:
சமயபுரத்தில் ஆட்சி செய்யும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்குதல் நலம்.

பூராடம்:

puraadam

பூராடம் நட்சத்திரம் நான்கு பாத பரிகாரங்கள்:

முதல் பாத பரிகாரம்:
தாரமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமியம்மை உடனுறை ஸ்ரீ கைலாசநாதரை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாத பரிகாரம்:
திருக்கரம்பனூர் என்னும் உத்தமர்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூரணவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாளை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாத பரிகாரம்:
காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மையை வணங்குதல் நலம்.

நான்காம் பாத பரிகாரம்:
திருஆவினன்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை தரிசித்தல் நலம்.

உத்திராடம்:

uthiraadam

உத்தராடம் நட்சத்திரக்காரர்களின்  நான்கு பாத பரிகாரங்கள்:

உத்தராடம் நட்சத்திர முதல் பாத பரிகாரம்:
வயலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானையும், ஸ்ரீ பொய்யாமொழி கணபதியையும் வணங்குதல் நலம்.

உத்தராடம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
திருக்கோளூரில் அருள்புரியும் ஸ்ரீ குமுதவல்லி (கோளூர்வள்ளி) உடனுறை ஸ்ரீ நிஷேபவித்தன் (வைத்த மாநிதிப் பெருமாள்) பெருமாளை வணங்குதல் நலம்.

உத்தராடம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
திருக்கடல்மல்லையில் (மாமல்லபுரத்தில்) வீற்றிருக்கும்
ஸ்ரீ நிலமங்கைத் தாயார் உடனுறை ஸ்ரீ ஸ்தலசயனப் பெருமாளை வணங்குதல் நலம்.

உத்தராடம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள குடுமியான்மலையின் அடிவாரத்தில் அருள்புரியும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ சிகாநாதரையும், குன்றின் மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணியரையும் வணங்குதல் நலம்.

திருவோணம்:

thiruvonam

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

முதல் பாத பரிகாரம்:
மதுரை – கம்பம் வழித்தடத்திலுள்ள சுருளிமலைக் குன்றின் குகையில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாத பரிகாரம்:
திருப்பதி வேங்கடேசப் பெருமாளை வணங்குதல் நலம்.

மூன்றாம் பாத பரிகாரம்:
திருப்புல்லாணியில் வீற்றிருக்கும் ஸ்ரீ கல்யாணவல்லி ஸ்ரீ பத்மாஸினி உடனுறை ஸ்ரீ ஆதிஜகந்நாதப் பெருமாளை வணங்குதல் நலம்.

நான்காம் பாத பரிகாரம்:
கொல்லூரில் அருள்பாலிக்கும் மூகாம்பிகையை வணங்குதல் நலம்.

அவிட்டம்:

avitam

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

அவிட்டம் நட்சத்திர முதல் பாத பரிகாரம்:
திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் வழித்தடத்தில் இருக்கும் தகட்டூரில் மூலவராக வீற்றிருக்கும் ஸ்ரீபைரவரை வணங்குதல் நலம்.

அவிட்டம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
சிக்கல் என்ற ஊருக்கு அருகிலுள்ள ஆவராணியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்தல் நலம்.

அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
திருவலஞ்சுழியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுவேத விநாயகரையும் ஸ்ரீ அஷ்டபுஜ காளியையும் வணங்குதல் நலம்.

அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
மாயவரம் – கும்பகோணம் மார்க்கத்திலுள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவரை தரிசித்தல் நலம்.

சதயம்:

sadhayam

சதயம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:

சதயம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:
சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கோமதியம்மை உடனுறை ஸ்ரீ சங்கரலிங்கரை வணங்குதல் நலம்.

சதயம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
உத்தரகோசமங்கையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மங்களேஸ்வரியம்மை உடனுறை ஸ்ரீ மங்களநாதரை வணங்குதல் நலம்.

சதயம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்: 
தஞ்சாவூரில் அருள்புரியும் ஸ்ரீ பெரியநாயகியம்மை உடனுறை ஸ்ரீ பிரகதீஸ்வரரையும் ஸ்ரீ கருவூர்தேவரையும் வணங்குதல் நலம்.

சதயம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்: 
தஞ்சாவூருக்கு வடக்கே உள்ள தென்குடித்திட்டையில் அருள்புரியும் உலக நாயகியம்மை உடனுறை வசிஷ்டேஸ்வரரையும் பசுபதீஸ்வரரையும் வணங்குதல் நலம்.

பூரட்டாதி:

purataadhi

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகாரங்கள்:

பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:
திருவானைக்காவில் அருள்புரியும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜம்புகேஸ்வரரை வணங்குதல் நலம்.

பூரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்: 
ஆனைமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மாசானியம்மனை வணங்குதல் நலம்.

பூரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்: 
கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் அருள்புரியும் ஸ்ரீ மரகதவல்லி உடனுறை ஸ்ரீ பட்டீஸ்வரரையும் ஸ்ரீ நடராஜப் பெருமானையும் வணங்குதல் நலம்.

பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
பழநியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணியை வணங்குதல் நலம்.

உத்திரட்டாதி:

uthiratadhi

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:
மயிலாடுதுறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அபயாம்பிகை உடனுறை மயூரநாதரையும் மேதா தட்சிணாமூர்த்தியையும் வணங்குதல் நலம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதிக்கு அருகிலுள்ள ஹாட்சன்பேட்டையில் வீற்றிருக்கும் அலர்மேல் மங்கை உடனுறை ஆதிகேசவப் பெருமாளை வணங்குதல் நலம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
திருச்சேறையில் அருள்தரும் ஸ்ரீ ஸாரநாயகி உடனுறை ஸ்ரீ ஸாரநாதப் பெருமானை வணங்குதல் நலம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
மருதமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீமுருகப்பெருமானை வணங்குதல் நலம்.

ரேவதி:

revathi

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய நான்கு பாத பரிகாரங்கள்:

ரேவதி நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:
உத்திரமேரூரில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வணங்குதல் நலம்.

ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
திருத்துறைப் பூண்டிக்கு அருகிலுள்ள தில்லை விளாகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சீதாபிராட்டிஉடனுறை ஸ்ரீகோதண்டராமனையும் வினய ஆஞ்சநேயனையும் வணங்குதல் நலம்.

ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயனை வணங்குதல் நலம்.

ரேவதி நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
திருக்காவலூரில் (காவலூரில்) வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமானை வணங்குதல் நலம்.

- Advertisement -