எந்த ராசிக்காரர்கள் என்ன செய்தால் கடன் பிரச்சனை தீரும் தெரியுமா ?

astrology

பொதுவாக பலரும் கடனை வாங்கிவிட்டு படாத பாடு படுகின்றனர். ஜோதிட ரீதியாக இதற்கு சில தீர்வுகள் உண்டு. ஒவ்வொரு ராசிக்காரரும் அவரவர் ராசிக்கு ஏற்ப சிலவற்றை தானம் செய்வதன் மூலம் கடன் பிரச்னையில் இருந்து விடுபட முடியும்.

மேஷம்:
meshamவெற்றியை இலக்காக கொண்டு செயலாற்றும் மேஷ ராசிக்காரர்களே, நீங்கள் உடல் ஊனமுற்றோருக்கு உங்களால் முடிந்ததை தானமாக அளிப்பது சிறந்தது. அதோடு தயிரைக்கொண்டு செய்யப்பட்ட ஏதேனும் மஞ்சள் நிற பலகாரத்தை பசுவிற்கு மாலை வேளைகளில் கொடுப்பதன் மூலம் கடன் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

ரிஷபம்:
rishabamசாதனை படைக்கும் மனம் படைத்த ரிஷப ராசி நண்பர்களே, நீங்கள் பசியால் வாடும் ஏழைகளுக்கு சாம்பார் சாதத்தை தானமாக வழங்கலாம். அதோடு ஜவ்வரிசி கொண்டு உங்களால் முடிந்த ஏதோ ஒரு பலகாரத்தை செய்து அதை பசுவிற்கு மாலை வேளைகளில் தானமாக அளிப்பதன் மூலமாக உங்கள் கடன் பிரச்சனை தீரும்.

மிதுனம்:
midhunamமுற்போக்கு சிந்தனையாளரான மிதுன ராசி நண்பர்களே நீங்கள் புதன்கிழமைகளில் பெருமாளை வணங்கிவிட்டு உங்களால் முடிந்த அளவு வெண்பொங்கலை தானமாக கொடுங்கள். அதோடு சூரியபகவானை மாலை வேலையில் வணங்குவதன் மூலம் கடன் சுமை குறையும்.

கடகம்:
kadagamபிறரின் அன்பிற்கு கட்டுப்படும் கடக ராசி நண்பர்களே, நீங்கள் மாலை வேலையில் பசுவிற்கு அகத்திக் கீரை கொடுப்பது நல்லது. அதோடு சிறிது வெல்லத்தை குரங்கிற்கு கொடுப்பதன் மூலம் உங்களின் கடன் சுமையானது வெல்லம் கரைவது போல கரைந்துவிடும்.

சிம்மம்:
simmamசெய்யும் தொழிலே தெய்வம் என்று நினைக்கும் சிம்ம ராசி நண்பர்களே, நீங்கள் பசியால் வாடும் ஏழைகளுக்கு தயிர் சாதத்தை தானமாக அளிப்பது நல்லது. அதோடு அரசமரத்தடி பிள்ளையாருக்கு சனிக்கிழமைகளில் அகல்விளக்கில் கருப்பு திரி கொண்டு தீபம் ஏற்றி வருவதன் மூலம் கடன் தொல்லை நீங்கும்.

- Advertisement -

கன்னி:
kanniமனதில் ஏராளாமான தன்னம்பிக்கை கொண்ட கன்னி ராசி நண்பர்களே நீங்கள் கோயிலிற்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆனா ஏதாவது பலகாரத்தை தானமாக அளிப்பது நல்லது. மேலும் தினசரி துளசி செடியின் முன் அகல்விளக்கில் தீபம் ஏற்றலாம். இதனால் உங்கள் கடன் தோஷம் விலகும்.

துலாம்:
thulamசிறந்த நண்பர்களையும் நல்ல உறவுகளையும் பெற்ற துலாம் ராசி நண்பர்களே, உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் பசியால் வாடும் ஏழைகளுக்கு வெண் பொங்கலை தானம் செய்யுங்கள். படிப்பிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் ஏழை குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இதனால் உங்களது கடன் பிரச்சனை மட்டும் இன்றி அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

விருச்சகம்:
virichigamஎப்போதும் சுறுசுறுப்போடு இருக்கும் விருச்சக ராசி நண்பர்களே, நீங்கள் அம்மன் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கலை தானம் செய்வதன் மூலம் உங்களின் பண வரவு அதிகரிக்கும். இதனால் உங்கள் கடன் பிரச்சனையும் தீரும்.

தனுசு:
dhanusuகுறிக்கோளை நிறைவேற்ற கடுமையாக உழைக்கும் தனுசு ராசி நண்பர்களே, செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு நீங்கள் மலர் தானம் செய்யலாம். அதோடு கஷ்டப்பட்டு வீடு கட்டுவோருக்கு உங்களால் முடிந்த ஒரு செங்கல்லையாவது செய்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் தானமாக கொடுப்பதன் மூலமாக கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

மகரம்:
magaramசெல்வாக்கோடும் சுய கௌரவத்தோடும் வாழ நினைக்கும் மகர ராசி நண்பர்களே நீங்கள் பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழங்களை கொடுப்பது நல்லது. மேலும் சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து அதை பசியால் வாடும் ஏழைகளுக்கு கொடுப்பது நல்லது. இதனால் உங்கள் கடன் தொல்லை விரைவில் நீங்கும்.

கும்பம்:
kumbamஎந்த நிலையிலும் எவருடைய தயவும் எதிர்பார்க்காமல் சுயமாக வாழ விரும்பும் கும்ப ராசி நண்பர்களே, நீங்கள் ஏழை எளியோரின் மருத்துவ செலவிற்கு உதவுவது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் பாலால் செய்யப்பட்ட ஏதோ ஒன்றை விஷ்ணுவிற்கு படைத்து பின் அதை மற்றவர்களுக்கு தானமாக வழங்குவதன் மூலம் கடன் தொல்லை அகலும்.

மீனம்:
meenamரகசியங்களை பாதுகாப்பதில் வல்லவரான மீன ராசி நண்பர்களே நீங்கள் சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வது நல்லது. மேலும் ஏழைகளுக்கு கோதுமையால் செய்யப்பட்ட ஏதேனும் உணவை தானமாக வழங்குவதன் மூலம் கடன் குறையும்.

இது பொதுவான ராசி பலன் தான். ஒவ்வொருவரின் ஜாதகத்தை பொறுத்து, செய்யும் பரிகாரத்தில் சில மாறுதல்கள் இருக்கும்