முகம் பளிச்சென்று மாறி உடல் முழுவதும் வெள்ளையாக இந்த ஒரு பவுடரை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம்

face
- Advertisement -

அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி தங்களை அழகுப்படுத்த விருப்பமில்லாதவர்கள் கூட தங்களது நிறத்தை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துவார்கள். ஒருவர் கருப்பாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருந்தாலும் சரி அவர்கள் தோலின் நிறம் சற்று பளிச்சென்று இருக்கவேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். அவ்வாறு நமது முகம் மற்றும் தோலின் நிறத்தை வெள்ளையாக மாற்ற வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யக்கூடிய இந்த பவுடரை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகின்றோம்.

face0

தேவையான பொருட்கள்:
கசகசா – 3 ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், பச்சை அரிசி – இரண்டு ஸ்பூன், தயிர் – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் கசகசா மூன்று ஸ்பூன், கடலைப் பருப்பு 2 ஸ்பூன், பச்சை அரிசி இரண்டு ஸ்பூன் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து சற்று கொரகொரப்பாக இருக்குமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை காற்று புகாத ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

gasagasa

ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த பவுடரில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு பிரஷ் பயன்படுத்தி, முகத்தில் நன்றாக பூசி விட்டு ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து, அதன் பின்னர் அப்படியே காய விட்டு விட வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரினை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இந்த பவுடரை உபயோகிக்கும் முன்னர் உங்கள் முகம் இருந்த நிறத்திற்கும் அதன் பின்னர் உங்கள் முகம் வெள்ளையாக மாறி இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெளிவாக தெரியும்.

- Advertisement -

குளியல் பவுடர்:
இந்த பவுடரை உடல் முழுதும் தேய்த்து குளித்து வந்தால் உடலின் நிறத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்தினால் குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவாக மாறி நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

face11

குளிக்கும் பொழுது இந்த பவுடரை பயன்படுத்தினால் முதலில் சோப்பு போட்டு குளித்து விட்டு, அதன் பின்னர் இந்த கலவையை உடல் முழுவதும் அப்ளை செய்து சிறிது நேரம் தேய்த்து விட்டு பின்னர் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று முறை சோப்பு பயன்படுத்தி குளித்தும் நான்கு நாட்கள் இந்த பவுடர் ஒன்றை மட்டும் பயன்படுத்தி குளித்தும் வந்தால் உங்கள் உடல் பகுதியிலுள்ள தொடை, முட்டிகள் போன்ற இடங்களில் இருக்கும் கருப்பு நிறங்கள் மறைந்து உடல் முழுவதும் வெள்ளையாக மாற ஆரம்பிக்கும்.

women

இவ்வாறு கழுத்து மற்றும் முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளுக்கு இந்தப் பவுடரை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தி வரும்பொழுது விரைவில் மறைந்து முகம் முழுவதும் சரியான நிறத்தில் வெள்ளையாக மாறும். குறிப்பு: இந்த பவுடரை அரைக்கும் பொழுது இதனுடன் சிறிதளவு ரோஜா இதழ்களையும் சேர்த்து அரைத்தால் உடல் வெள்ளையாக மாறுவதுடன் உங்கள் சருமம் மிகவும் மிருதுவாக மாற ஆரம்பிக்கும். நீங்கள் அரைத்து வைக்கும் இந்த பவுடரை ஐந்து அல்லது ஆறு மாதங்கள் கூட வெளியில் வைத்து பயன்படுத்தலாம்.

- Advertisement -