இப்படியும் வெள்ளை சட்னி அரைக்கலாம். இந்த சட்னி செய்ய 1 துண்டு தேங்காய்கூட சேர்க்க வேண்டாம்.

- Advertisement -

தேங்காய் சேர்க்காமல் ஒரு பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சட்னியை சிலபேர் தேங்காய் சேர்க்காத ‘மதுரை தண்ணி சட்னி’ என்றும் சொல்லுவார்கள். தேங்காய் சாப்பிடக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த சட்னி ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க. இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள அவ்வளவு சூப்பரான ரெசிபி இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

madurai-thanni-chutney

முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 10 லிருந்து 12 பச்சை மிளகாய்களை போட்டு நன்றாக வதக்கவேண்டும். பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள். பச்சை மிளகாய் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் 2 பெரிய வெங்காயங்களை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். வெங்காயம் பொன்னிறம் வரும் வரை நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் நன்றாக வதங்வில்லை என்றால் சட்னியும் சுவை நன்றாக இருக்காது.

- Advertisement -

வதக்கிய இந்த கலவையை நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு 1/4 கப் பொட்டுக்கடலை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 90% அரைத்துக் கொண்டால் போதும். இந்தச் சட்னி லேசாக கொரகொரப்பாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

chutney

அரைத்த இந்த சட்னியை ஒரு அகலமான கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி இந்த சட்னியை கொஞ்சம் தண்ணீராக கரைத்து கொண்டால் தான் நன்றாக இருக்கும். அரைத்த சட்னி அப்படியே இருக்கட்டும். இதற்கு நாம் ஒரு வித்தியாசமான தாளிப்பு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 2, போட்டு சிவக்க விட்டு மிக மிக பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல் சேர்த்து வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் வதங்கியவுடன் இறுதியாக 1/2 ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். அடுப்பை அணைத்த உடனேயே கிண்ணத்தில் கரைத்து வைத்திருக்கும் சட்னியை கடாயில் இருக்கும் தாளிப்பில் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும். அவ்வளவுதான். சூப்பரான காரசாரமான தேங்காய் சேர்க்காத தண்ணி சட்னி தயார்.

அடுப்பை அணைகாமல் சட்னியை கடாயில் உள்ள தாளிப்பில் ஊற்றக்கூடாது. பொட்டுகடலை வெந்துவிட்டால் சட்னியின் சுவை மாறி விடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்தச் சட்னியை சுட சுட இட்லிக்கு மேல் ஊற்றி சாப்பிட்டுப்பாருங்கள். இட்லி உள்ளே இறங்குவது தெரியாது. அட்டகாசமான சட்னி ரெசிபி இது. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. இந்த சட்னி கொஞ்சம் காரணமாகத்தான் இருக்கணும். உங்கள் வீட்டில் இருக்கும் பச்சை மிளகாய்க்கு ஏற்ப பச்சை மிளகாயின் அளவுகளை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -