நவராத்திரியை ஏன் கொண்டாட வேண்டும்? நவராத்திரி பூஜை செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன?

navaraththiri
- Advertisement -

சிவனை வழிபடுவது சிவராத்திரி என்றும், அம்மனை வழிபடுவது நவராத்திரி என்றும் நம் இந்து மதத்தில் இவற்றை ஒரு திருவிழாவாக கடைப்பிடித்து வருகின்றனர். இப்பொழுது நவராத்திரி திருநாள் துவங்க இருக்கிறது. இத்திருவிழா மைசூரில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் தூத்துக்குடியில் அமைந்துள்ள குலசேகரபட்டியில் இருக்கும் முத்தாரம்மன் கோவிலிலும் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையை ஏன் கொண்டாட வேண்டும்? இந்த பூஜையின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பது பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Amman

நவராத்திரி:
நவராத்திரி என்றால் ஒன்பது இரவு எனப் பொருள்படும். நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்றும் அர்த்தம் உண்டு 9 இரவுகளும் அம்மனை வழிபடும் உன்னதமான திருவிழா தான் இந்த நவராத்திரி.

- Advertisement -

அம்பாள் மகிஷாசுரனை தவம் செய்வதற்காக தாம் மேற்கொண்ட காலம் தான் இந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது அலைமகள் கலைமகள் மலைமகள் என முப்பெரும் தேவியரும் ஒரே ரூபமாக வந்து மகிஷாசுரனை வதம் செய்த நாளாகும்
durgai amman

இந்த சம்ஹார விஷயத்தில் மனித வாழ்க்கைக்கு தேவையான உள்ளார்ந்த அர்த்தம் ஒன்று இருக்கிறது. இதனை நாம் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களை போக்க நமக்கு ஒரு விடை கிடைத்துவிடும்.

ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தையும் ஒன்று சேர்ந்து அவனுக்குள் இருக்கும் தீய குணங்களை அழிப்பதற்காக தன்னைத்தானே பக்குவப்படுத்திக் கொள்ள கூடிய தவகாலமாகவும் இந்த ஒன்பது நாட்களை எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

bala-thiripura-sundhari-amman

நவராத்திரி கொண்டாடும் முறை:
இந்த நவராத்திரி தினத்தில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது என்பது வழக்கமாகும். 9 நாட்களும் ஒவ்வொரு அம்மனுக்கு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு முதல் நாள் அம்மனை சாமுண்டி தேவியாகவும், இரண்டாவது நாள் வாராஹி அம்மனாகவும், மூன்றாவது நாள் இந்திராணி தேவியையும், நான்காவது நாள் வைஷ்ணவி தேவியையும், ஐந்தாவது நாள் மகேஸ்வரி தேவியையும், ஆறாவது நாள் கவுமாரி அன்னையையும், ஏழாவது நாள் மகாலட்சுமி தாயையும், எட்டாவது நாள் நரசிம்மி அம்மனையும், ஒன்பது நாள் பிராமி அம்மனையும் வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான நவதானியங்கள் வைத்து நெய்வேத்தியம் செய்து அம்மனுக்கு படைத்து வணங்குதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி திருவிழா மிகவும் விசேஷமானதாகும். வெயில், மழை, குளிர் என இவை மூன்றும் கலந்து இருக்கும் இந்த புரட்டாசி மாதத்தில் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியால் பூமி உட்கிரகித்து வைத்திருந்த வெப்பத்தை வெளியிடும் காலமாக இருக்கிறது. இதனால் உடலில் உஷ்ணம் அதிகமாகும் எனவே இது போன்ற நாட்களில் அசைவம் சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் மேலும் அதிகரிக்கும் இதன் காரணமாகவே புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

pongal-panai1

இவ்வாறு இந்த ஒன்பது நாட்களும் நவராத்திரி பூஜைக்காக நாம் செய்யும் தானியங்களால் செய்யப்பட்ட நைவேத்தியங்கள் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதாகவும், ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இதனால் நவராத்திரி திருவிழாவை ஆன்மீக ரீதியாக மட்டும் பார்க்காமல் அறிவியல் ரீதியாகவும் பார்த்து இந்த பண்டிகையை நமது தலைமுறையினரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

- Advertisement -