தேங்காய் சேர்க்காமல் செய்யும் மிகவும் சுவையான வேர்க்கடலை சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவைக்கு ஈடு இணையே இருக்காது

peanut
- Advertisement -

காலை உணவிற்கும், இரவு உணவிற்கும் மிகவும் எளிமையாக செய்யும் சைடிஷ்தான் தேங்காய் சட்னி. ஆனால் இந்த தேங்காய் சட்னி ஒரு சிலரின் உடல் நலத்திற்கு பிரச்சனையாக இருக்கும். தேங்காய் சட்னியை சாப்பிடுவது ஒரு சிலருக்கு செரிக்காமல் அஜீரண கோளாறு ஏற்படும். அதுபோல வீட்டிலுள்ள வயதானவர்களுக்கு இந்த தேங்காய் சட்னியை சாப்பிட கொடுப்பதும் அவர்களின் உடல் நலத்திற்கு நல்லதாக அமையாது. எனவே தேங்காய் சேர்க்காமல் அதேசமயம் உடனடியாக செய்யக்கூடிய ஒரு சுவையான வேர்கடலை சட்னியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

coconut-chutney

தேவையான பொருட்கள்:
வேர்கடலை – 200 கிராம், பூண்டு – 5 பல், சின்ன – வெங்காயம் – 3, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, வரமிளகாய் – 6, கருவேப்பிலை – மூன்று இலை, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை:
முதலில் வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து வறுத்து கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

verkadalai

அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, வரமிளகாய், கருவேப்பிலை மற்றும் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன்பின்னர் 200 கிராம் வேர்க்கடலை மற்றும் உப்பு சேர்த்து அவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொண்டு நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு மிக்ஸி ஜாரில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கழுவி அந்த தண்ணீரையும் வேர்க்கடலை சட்னியுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

mixer1

பிறகு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்தவற்றை வேர்க்கடலை சட்னியுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டால் போதும். சுவையான வேர்க்கடலை சட்னி தயாராகிவிடும்.

No onion Chutney

பலரும் இதுவரையில் சட்னி அரைப்பது என்றால் தேங்காய் வைத்து தான் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இவ்வாறு தேங்காய் இல்லாமல் ஒரு முறை செய்து பாருங்கள். எவ்வளவு சுவையாக இருக்கும் என்று உங்களுக்கே புரியும். தேங்காய் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்சனை உண்டாகும் என்று இருப்பவர்களும் இந்த வேர்க்கடலை சட்னியை தயக்கமில்லாமல் விரும்பி சாப்பிடலாம்.

- Advertisement -