புளி சேர்க்காமல் ரசம் வைக்க இந்த ஒரு பொருளை பயன்படுத்தி பாருங்கள். நீங்கள் வைக்கும் ரசம் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

rasam
- Advertisement -

ஒரு சில வீடுகளில் தினமும் சாதம், குழம்பு, பொரியல் செய்தாலும் தவறாமல் ரசமும் இருக்க வேண்டும். என்னதான் குழம்பு, தயிர், மோர் சேர்த்து சாதம் சாப்பிட்டாலும், இறுதியாக ஒரு பிடி சாதத்தில் ரசம் சேர்த்து சாப்பிடுபவர்கள் என்று ஒரு சிலர் இதனை பழக்கமாக வைத்துள்ளனர். ஏனென்றால் நாம் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலும் அவை நமது வயிற்றுக்குள் சென்று ஜீரணமாக சற்று நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு ஜீரண கோளாறு, அஜீரண பிரச்சனை போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் காரம், இனிப்பு, புளிப்பு எந்தவிதமான உணவை சாப்பிட்டாலும் இறுதியில் ஒரு கைப்பிடி ரசம் சாதம் சாப்பிட்டால் போதும், அனைத்தும் சட்டென ஜீரணமாகிவிடும். வாய்வுத்தொல்லை பிரச்சனையும் இருக்காது. ஆனால் ஒரு சில சமயங்களில் புளி சேர்க்காமல் ரசம் செய்ய வேண்டியிருந்தால், இந்த ஒரு மெத்தடை பயன்படுத்தி சுவையான ரசம் செய்யலாம். வாருங்கள் அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி – இரண்டு, எலுமிச்சை பழம் – பாதி அளவு, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், பூண்டு – ஆறு பல், வர மிளகாய் – 4, கடுகு – கால் ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் வர மிளகாய் இவை மூன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு முதலில் இவற்றை பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் இவற்றுடன் இரண்டு தக்காளி பழங்களை நான்கு துண்டுகளாக நறுக்கி சேர்த்து, அதனையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் 3 அல்லது 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கால் ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் ஆறு பல் பூண்டை நன்றாக இடித்து சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன்பிறகு இரண்டு வரமிளகாய் சேர்த்து வதக்கி விட்டு, கலந்து வைத்துள்ள கலவையை கடாயில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். ரசம் நுரை பொங்க கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -