யாருடைய சாபம் உண்மையிலேயே பலிக்கும்? இவர்கள் வாயில் மட்டும் தெரியாமல் கூட விழுந்து விடாதீர்கள்!

sabam0
- Advertisement -

ஒருவர் மனம் நொந்து இன்னொருவருக்கு கெடு பலன்களை தன்னுடைய வாயால் கூறுவதை சாபம் என்கிறோம். இந்த சாபம் யார் கூறினால் பலிக்கும்? சாபம் என்பது உண்மையில் நடக்கக்கூடிய ஒரு விஷயமா? இல்லையா? தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இதில் மற்றவர்களுடைய சாபத்தை வாங்கிக் கொண்டால் என்னென்ன நிகழும்? யாருடைய சாபம் பலிக்கும்? யாருடைய வாயில் மட்டும் விழுந்து விடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

enemy

சிலருக்கு முனுக்கென்றால் கோபம் வரும். சின்னதாக அவர்களுக்கு ஏதாவது செய்து விட்டால் போதும், உடனே நாம் நன்றாக இருக்கக் கூடாது என்று வார்த்தைகளால் நைய்ய புடைத்து விடுவார்கள். கோபம் வரும் போதெல்லாம் ஒருவர் நமக்கு சாபம் விட்டால் அந்த சாபம் எல்லாம் பலிக்குமா என்ன? அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. கோபத்தில் விடும் சாபங்கள் எல்லாம் உண்மையில் சாபங்கள் ஆக மாறுவது கிடையாது. பிறகு சாபம் என்றால் என்ன? யாருடைய சாபம் நமக்கு உண்மையிலேயே பாதிப்புகளை ஏற்படுத்தும்?

- Advertisement -

ஒருவர் உண்மையான மனதுடன், எந்த தீங்கும் இழைக்காத மெய்யான உறவாக இருக்கும் பொழுது, அவர்களுக்கு துரோகம் இழைப்பவர்கள் சாபம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அதற்கு உரிய தண்டனைகளை மற்றவர்கள் பெற்று தான் ஆக வேண்டும் என்பது நியதி. எமலோகத்தில் நாம் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் சித்திர குப்தன் என்கிற ஒருவர் எழுதி கொண்டிருப்பாராம். இதனை பல இடங்களிலும் நாம் கேள்விப்பட்டிருப்போம். இறந்த பின்பு நடக்கும் நிகழ்வுகளை நாம் கண்டதில்லை ஆனால் நம் கண் முன்னே சில விஷயங்களை கண்டிருப்போம்.

enemy1

நமக்கு சிலர் பொறாமை குணங்களால் பொறாமைப்பட்டு, நாம் நன்றாக இருக்கக் கூடாது என்று நமக்கு கெட்டதை நினைப்பவர்களுக்கு பூமராங் போல அவர்கள் கொடுத்த சாபம் அவர்களுக்கே திரும்புவதை பல இடங்களில் பார்த்திருக்கலாம். எனவே சாபம் என்பது உண்மையில் பலிக்கக் கூடிய ஒன்று தான், ஆனால் அதனை யார் கூறினால் பலிக்கும் என்பதில் தான் சூட்சம ரகசியம் ஒளிந்து கொண்டுள்ளது.

- Advertisement -

ஜாதக ரீதியாக லக்னத்திலிருந்து 2ம் இடத்தில் ஒருவருக்கு தீய கிரகங்கள் இருந்தால் அவர்கள் சொல்லும் தீய பலன்கள் மற்றவர்களுக்கு பலிக்குமாம். அதையே அவர்கள் சுப பலன்களாக கூறும் பொழுது சுப கிரகங்கள் அமர்ந்து இருந்தால் அவையும் பலிக்குமாம். அது மட்டுமல்லாமல் ஒருவர் உண்மையான மனதுடன், தூய்மையான எண்ணத்துடன் ஒருவருடன் நட்புறவு கொண்டிருந்தால், அந்த நட்பிற்கு இன்னொருவர் பாத்திரமாக நடந்து கொள்ளாவிட்டால், துரோகம் இழைத்தால் எனில் அதனால் இவர்கள் மனமுவந்து கொடுக்கும் சாபம் ஆனது உண்மையிலேயே பலிக்கும்.

sabam

இன்னும் உதாரணத்திற்கு தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று அரும்பாடுபட்டு தன் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து உண்மையிலேயே பிள்ளைகள் மீது அக்கறையுள்ள பல நல்ல பெற்றோர்கள் மனம் நோகும்படி பிள்ளைகள் நடந்து கொண்டால் அந்தப் பெற்றோர்கள் கொடுக்கும் சாபம் ஆனது நிச்சயம் பலிக்கும். உடன் பிறந்த ரத்த பந்தம் உள்ள சகோதரர் ஒருவர் மற்ற சகோதர, சகோதரிகளுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு நபராக இருக்கும் பொழுது, அவர்களுக்கு மற்றவர்கள் துரோகம் இழைத்தால் நிச்சயம் அவர்கள் கொடுக்கும் சாபம் ஆனது பலிக்கும். பெற்றோர்கள், ரத்த சம்பந்த உறவுகள் மட்டுமல்லாமல் வெளிநபர்கள், நண்பர்கள் என்று ஒருவர் உண்மையாக இருந்து எதையும் எதிர்பார்க்காமல், தன்னலம் கருதாது இன்னொருவருக்கு அன்பைக் கொட்டிக் கொடுத்து, உழைக்கும் பொழுது மற்றவர்கள் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டால் அதனால் அவர்கள் மனம் நோக விடும் சாபங்கள், உண்மையில் பலிக்கும். எனவே இத்தகையவர்கள் வாயில் விழாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.

- Advertisement -