வீட்டில் இருக்கும் கோதுமை மாவில் சுவையான இந்த இனிப்பு கொழுக்கட்டையை ஒருமுறை செய்து பாருங்கள். மிகவும் சாஃப்ட்டான வாயில் வைத்த உடனே கரையும் அருமையான சுவையில் இருக்கும்

kolukattai
- Advertisement -

வீட்டில் பூஜை அல்லது பண்டிகை என்றால் மட்டுமே பிடி கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை போன்ற இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுக்கின்றனர். ஏனென்றால் இவற்றைச் செய்வதற்கு சற்று நேரம் கூடுதலாக செலவாகும். எனவே தான் குறிப்பிட்ட நாள்களில் மட்டும் இதனை செய்து கொடுக்கின்றனர். கொழுக்கட்டை என்றாலே அதனை பெரும்பாலும் அரிசி மாவில் மட்டும் தான் செய்வதுண்டு. ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக கோதுமை மாவைப் பயன்படுத்தி இவ்வளவு சாஃப்பிட்டான மிகவும் சுவையாக இருக்கும் கொழுக்கட்டையை ஒரு முறை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இவ்வாறு கோதுமை மாவில் செய்யும் கொழுக்கட்டையை வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிடக் கொடுத்தால், இது போதாது இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு நாவில் கரையும் சுவையுடன் மிகவும் சூப்பராக இருக்கும். வாங்க! இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய் – 5 சில்லு, ஏலக்காய் பொடி – அரை ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, எள் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஐந்து சில்லு தேங்காயை தேங்காய் துருவலில் வைத்து பொடியாகத் துருவி வைக்க வேண்டும். பின்னர் முக்கால் கப் வெல்லத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் 11/4 கப் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

பிறகு தண்ணீர் சூடானதும் வெல்லத்தை சேர்த்து, வெல்லம் முழுவதுமாக கரைந்ததும் அதனை வடிகட்டி, மீண்டும் அதே பாத்திரத்திற்கு மாற்றி, அடுப்பின் மீது வைக்க வேண்டும். பிறகு இதில் அரை ஸ்பூன் ஏலக்காய்த்தூள், ஒரு சிட்டிகை உப்பு, துருவிய தேங்காய்ப்பூ மற்றும் ஒரு ஸ்பூன் எள் சேர்த்து கலந்து விடவேண்டும்.

- Advertisement -

பிறகு தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மாவினை நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு மாவு கெட்டியானதும் அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இந்த மாவை ஆற வைத்து, கை பொறுக்கும் சூட்டிற்க்கு வந்ததும் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து பிடி கொழுக்கட்டை போன்று பிடித்து வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இட்லித் தட்டில் இந்த கொழுக்கட்டைகளை வைத்து ,அதனை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி போட்டு, அடுப்பின் மீது வைத்து பத்து நிமிடம் வேக வைத்து எடுத்தால் போதும். மிகவும் சுவையான, மிருதுவான, நாவில் கரையும் பிடிகொழுக்கட்டை தயாராகிவிடும். இதனை சுடச்சுட உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரரிமாறி கொடுத்துப் பாருங்கள். தின்னத் தின்ன தெகுட்டாதது போன்று சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -