இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இப்படி மிகவும் சுவையான கடலைப்பருப்பு சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள். தோசையுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்கத் தோன்றும்

chutni
- Advertisement -

அனைவரது வீட்டிலும் தினமும் இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு சட்னி வகை செய்துதான் ஆகவேண்டும். அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடும் சட்னி என்றால் அது காரச் சட்னி அல்லது தக்காளி சட்னி மட்டும்தான். இவற்றில் நாவின் உரைக்கின்ற அளவிற்கு காரமும் புளிப்பும் சேர்ந்து இருப்பதால், இதன் சுவை அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக இருக்கிறது. அவ்வாறு தான் இந்த கடலைப்பருப்பு சட்னியிலும் காரமும், புளிப்பும் இரண்டர கலந்து மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். சுடச்சுட இட்லி செய்து அதனுடன் இந்தச் சட்னியை வைத்துக்கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் எத்தனை இட்லி சாப்பிடுகிறீர்கள் என்பதே தெரியாமல் அதிகமாகச் சாப்பிட்டு கொண்டே இருப்பீர்கள். வாருங்கள் இந்த கடலைப்பருப்பு சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 4 ஸ்பூன், வெங்காயம் – 2, தக்காளி – 2, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, வரமிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – 5 பல், தேங்காய் – 3 சில்லு, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன். கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் தேங்காயை பொடியாகத் துருவி வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் மூன்று ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு இரண்டு வரை மிளகாயை காம்பு கிள்ளி சேர்க்க வேண்டும். பின்னர் பச்சை மிளகாயையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இஞ்சி, பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கி வைத்துக்கொள்ளவும். அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரைஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் இவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் கலந்து விட வேண்டும் .

- Advertisement -