எப்போதும் செய்யும் தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னியை விட மிகவும் ஆரோக்கியமான வேர்க்கடலை சட்னி

verkadalai
- Advertisement -

வேர்க்கடலை சட்னி  இட்லி, தோசை, பணியாரம், ஊத்தப்பம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை  சுலபமான முறையில் அதே சமயத்தில் விரைவில் செய்யலாம். வேர்கடலை சட்னி பலவிதமாக செய்யப்படுகிறது. வேர்க்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து செய்யலாம், அல்லது வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து செய்யலாம். இந்த பதிவில் வேர்க்கடலையுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து சுவையான சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி கூறப்பட்டுள்ளது. இப்படி வேர்க்கடலை வைத்து செய்யும் சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இவற்றைவிட மிகவும் ஆரோக்கியமானதாகும். இதன் சுவையும் மற்ற சட்னிகளை விடவும் அதிகமான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த வேர்கடலை சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 1/2  கப், சமையல் எண்ணெய் – 1  ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பூண்டு – 5  பற்கள், காய்ந்த மிளகாய் – 7, சீரகம் – 1/2  ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், எண்ணெய் – 1  ஸ்பூன், கடுகு – ஸ்பூன், உடைத்த உளுந்து – 1/2  ஸ்பூன், கருவேப்பிலை –  சிறிதளவு.

- Advertisement -

செய்முறை:
ஒரு வாணலியில் 1/2 கப் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும். லேசாக நிறம் மாறி வேர்கடலை மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை  வறுத்த பின்னர் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து தோல் நீக்கவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும், 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் 1 சிறிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி மென்மையாக வதங்கியதும் 6 காய்ந்த மிளகாய் சேர்த்துக் வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு 5 பல் பூண்டு,  மற்றும் 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளவும். இதை 2 – 3 நிமிடங்களுக்கு வதக்கிய பின்னர். அனைத்தையும் ஒரு கட்டிற்கு மாற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆரிய பிறகு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ச வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் ஆற வைத்த வெங்காயம், தக்காளி கலவையை சேர்க்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு  மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியை அடுப்பின் மீது வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், 1/2 ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதனுடன் 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு,  1 காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்டையுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வேர்கடலை சட்னி தயாராகிவிட்டது.

- Advertisement -