வெயிலில் கறுத்த உங்கள் முகத்தை சட்னு பளிச்ன்னு மாத்தனுமா இப்படி ட்ரை பண்ணுங்களேன்.

- Advertisement -

நாம் வெளியில் எங்கு கிளம்பினாலும் முகத்தை அழகாக பராமரித்து மேக்கப் போட்டு எந்த அளவிற்கு பிரஷ்ஷாக கிளம்பி போகிறோமோ வரும் போது அதைவிட பல மடங்கு டல்லாக தான் திரும்பி வருவோம். அதற்கு காரணம் வெளியில் இருக்கும் அழுக்கு, தூசு இது மட்டும் இல்லாமல் வெயிலில் பட்டு முகம் கறுத்து போய் விடும். இதை உடனுக்குடன் நாம் சரி செய்யாமல் விட்டு விட்டால் நம் முகத்தின் உண்மையான நிறமே மாறி கறுத்து போய்விடும். இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்கான ஒரு பேக் தான் இந்த சன் டன் ரிமூவல் ஃபேஸ் பேக். அதை எப்படி செய்வது என்றும், அதை எப்படி நம் முகத்தில் போடுவதும் என்பது பற்றியும் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதை பேக் போடுவற்கு முன்னால் முகத்தை ஒரு ஸ்கிராப் செய்ய வேண்டும். அதற்க்கு ஒரு கிரீம் தயார் செய்து கொள்ளுவோம்.அதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் காப்பித்தூள் இரண்டு ஸ்பூன், சர்க்கரை இரண்டு ஸ்பூன், தேன் இரண்டு ஸ்பூன் மூன்றையும் சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக கலந்தால் கொஞ்சம் கொரா கொரப்பான பதத்திற்கு கிரீம் கிடைக்கும். இதை முகத்தில் தேய்த்து ஒரு பத்து நிமிடம் ஸ்கிராப் செய்து முகத்தை அலம்பி விடுங்கள். வெயிலில் சென்று வந்தால் முகத்திதிற்கு மேல் படித்த கருமை நீங்கிவிடும்.

- Advertisement -

இப்படி படிந்த கருமையை மட்டும் நீக்கினால் போதாது. இதை தொடர்ந்து உங்கள் முகத்தை எப்போதுமே நிறம் மாறாமல் காக்க, இதையும் சேர்த்து போட்டால் தான் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட முழுமையான கருமை நீங்கும். அதற்கு இந்த ஒரு பேக் தயார் செய்ய வேண்டும்.

அதை செய்ய ஒரு கிண்ணத்தில் சர்க்கரை இரண்டு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன், இதை நன்றாக குழைத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். உங்கள் முகத்தை நன்றாக கழுவி துடைத்த பிறகு, இந்த பேஸ்டை தேய்த்து ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு சிறிது நேரம் மசாஜ் செய்து முகத்தை எப்போதும் போல சாதாரண தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள்.

- Advertisement -

இந்த இரண்டு எளிய வழிகளை எப்போது நீங்கள் வெயிலில் சென்று வந்தாலும் உடனே செய்து விடுங்கள். உங்கள் நிறம் கொஞ்சம் கூட மாறாமல் கூடுதல் அழகுடன் ஜொலிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: அடர்த்தியாக முடி வளர, தீயாய் வேலை செய்யும் சூப்பரான ஹேர் ஸ்பிரே இது. செலவே இல்லாத செம ஐடியாங்க. மிஸ் பண்ணாதீங்க.

இந்த பேக்கில் சேர்க்க கூடிய சர்க்கரை, தேங்காய் எண்ணெய் போன்றவை முகத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கும் தன்மை கொண்டது. தேன் நமது முகத்தை காத்து இளமையுடன் இருக்க உதவும். மஞ்சள் கிருமி நாசினி மட்டும் இன்றி நிறத்தை அதிக படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. நம் வீட்டில் இருந்தே செய்ய கூடிய இந்த சின்ன சின்ன குறிப்புகள் தெரிந்து கொண்டு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எளிய முறையில் உங்களின் சருமத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

- Advertisement -