யோகம் பெருக ஏற்ற வேண்டிய தீபம்

perumal dheepam
- Advertisement -

ஒவ்வொரு நாளும் யோகமான நாளாகவும் அதிர்ஷ்டமான நாளாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். அந்த நாளில் நாம் தொடங்கும் செயல் நமக்கு வெற்றியை தர வேண்டும் என்றும் அந்த நாளில் நாம் செய்யக்கூடிய அனைத்து செயல்களும் பிற்காலத்தில் நமக்கு நன்மைகளை மட்டுமே தர வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்போம், செயல்படவும் செய்வோம். ஆனால் இது பலருக்கும் நடக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான யோகங்களையும் பெறுவதற்கு நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எந்த முறையில் தீபம் ஏற்று வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

யோகம் பெருக ஏற்ற வேண்டிய தீபம்

நமக்கு யோகத்தை தரக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயார். இவர்கள் இருவரின் அருளையும் நாம் பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் இவர்களுக்கு உரிய தினங்களை நாம் தேர்வு செய்து வழிபட வேண்டும். அப்படி பெருமாளுக்கு உரிய தினமாக திகழ்வதுதான் ஏகாதசி திதி இருக்கும் தினம்.

- Advertisement -

இந்த திதியானது நாளை காலை 5:35 மணி வரை இருக்கிறது. அதாவது பிரம்ம முகூர்த்த நேரம் முடியும் சமயம் ஏகாதசி திதியும் முடிகிறது. எந்த ஒரு திதியாக இருந்தாலும் ராகு காலம், எமகண்டம் போன்ற நேரமாக இருந்தாலும் கடைசி நேரங்களே மிகவும் முக்கியமான நேரமாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளைய தினம் ஏகாதசி நிறைவடையும் நேரம் என்பது பிரம்ம முகூர்த்த நேரமாக இருப்பதால் அந்த நேரத்தில் நாம் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கை யோகமான வாழ்க்கையாக மாறும்.

இதற்கு நாளை காலை 4:00 மணியிலிருந்து 5:30 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பாளத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் வாசனை நிறைந்த மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். அடுத்ததாக இதில் பஞ்சு திரியை போட்டுக் கொள்ளுங்கள். வடக்கு பார்த்தவாறு இந்த தீபம் எறிய வேண்டும். அப்படி வைத்துவிட்டு இந்த தீபத்திற்கு முன்பாக காய்ச்சாத பசும்பாலை நெய்வேத்தியமாக வைத்து தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

பிறகு சாம்பிராணி தூபம் போட்டு விட்டு என் வாழ்வில் அனைத்து விதமான யோகங்களையும் நான் பெறவேண்டும். பணம் நகை என்று அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை எரிய வேண்டும். இந்த தீபத்தை குளிர வைத்த பிறகு அந்தப் பாலை எடுத்துக் காய்ச்சி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக தந்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நினைத்ததை நிறைவேற்றும் எலுமிச்சை தீப வழிபாடு

இந்த முறையில் தீபம் ஏற்றி முழுமனதோடும், நம்பிக்கையோடும் வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி யோகம் பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -