வெறும் 10 நிமிடத்தில் பருப்பு இல்லாமல், புளி இல்லாமல் இப்படியும் தக்காளி சாம்பார் வைக்கலாம்.

sambar
- Advertisement -

திரும்பத் திரும்ப பருப்பு போட்ட சாம்பார் வைப்பதற்கு பதிலாக, கொஞ்சம் வித்தியாசமாக இப்படி தக்காளி சாம்பார் ட்ரை பண்ணி பாருங்க. இது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக அருமையான சைட் டிஷ் ஆக இருக்கும். அதேசமயம் காலையில் பரபரப்பாக சமைக்கும்போது மிகவும் சுலபமாகவும் சமைக்கக் கூடிய குழம்பு என்று கூட சொல்லலாம். உங்களுக்கு இந்த சிம்பிள் ரெசிபியை தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா. வாங்க ரெசிபிக்கு போவோம்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் மீடியம் சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் – 1, தக்காளி பழம் – 4, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி தழை – 2 இணுக்கு காம்புகளோடு, இந்த எல்லா பொருட்களையும் ஓரளவுக்கு துண்டு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். அப்படியே விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, மூடி போட்டு 2 விசில் வைத்து விட்டால் போதும்.

குக்கர் விசில் வருவதற்குள் இன்னொரு பக்கம் ஸ்டவ்வில் ஒரு தாளிப்பு கரண்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், கருவேப்பிலை – 1 ஒரு கொத்து, தட்டிய பூண்டு பல் – 4, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், சாம்பார் பொடி – 2 ஸ்பூன் இந்த பொருட்களை போட்டு நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். (வெங்காயம் வதங்கி வந்தவுடன், இறுதியாக சாம்பார் பொடி போட்டு 2 நிமிடம் வதக்கினால் போதும்.)

- Advertisement -

இதற்குள் குக்கரில் வைத்த தக்காளி விழுது விசில் வந்து தயாராக இருக்கும். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து தாளிப்பு கரண்டியில் இருக்கும், தாளிப்பை குக்கரில் இருக்கும் குழம்பில் கொட்டி நன்றாக கலந்து குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு கொதி வைத்தால் போதும். சூப்பரான தக்காளி சாம்பார் தயார். இறுதியாக கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பை அணைத்து விட்டு பரிமாறலாம்.

பின்குறிப்பு: உங்களுக்கு தேவைப்பட்டால் கொஞ்சமாக பொட்டுக்கடலை மாவை கரைத்து இந்த சாம்பாரில் ஊற்றி, சாம்பாரை கொதிக்க வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கடலை மாவு கரைத்து ஊற்றி கொதிக்க விட்டு, இந்த சாம்பாரை பரிமாறலாம். அது அவரவர் விருப்பம். உங்கள் விருப்பம் போல சில மாற்றங்களை செய்து இப்படி ஒரு சாம்பாரை செய்து ருசித்து பாருங்கள். நிச்சயம் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -