இந்த 5 தவறுகள் உங்களுடைய வீட்டில் அடிக்கடி நடந்தால், தெய்வம் உங்கள் வீட்டில் இல்லை என்று தான் அர்த்தம். உங்க வீட்ல இந்த தவறு நடக்குதான்னு ஒரு முறை செக் பண்ணிக்கோங்க.

door-vasal-lakshmi
- Advertisement -

எதிர்பாராமல் சில நேரங்களில் சில கெட்ட சகுனங்கள் தவறுகளாக வீட்டில் நடப்பது என்பது இயல்புதான். ஆனால், ஒரு கெட்ட சகுனம் மீண்டும் மீண்டும் நம்முடைய வீட்டில் நடந்து கொண்டே இருக்கிறது என்றால், அது என்ன என்று, வீட்டில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டும். பெரியவர்களிடம் இது இப்படி நடக்கிறது, என்ன செய்வது என்று கேட்டு, ஆலோசனை பெறுவதில் ஒன்றும் தவறு கிடையாது.

கெட்ட சகுனம் நடந்து விட்டால் உடனே, நம் குடும்பத்திற்கு கெட்டது நடந்து விடும் என்பது அர்த்தம் கிடையாது. ஏதோ ஒரு அறிகுறியை இறைவன் நமக்கு இதன் மூலமாக சொல்லுகின்றான். இதற்கு பரிகாரம் என்ன செய்வது, எந்த சாமியை கும்பிடுவது, என்பதை தெரிந்து வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறு கிடையாது. அந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நமக்கு வரக்கூடிய கெட்டதல் தடுக்கப்படும். உங்களுடைய வீட்டிலும் அப்படி நடக்கவே கூடாது கெட்ட சகுனங்கள் என்னென்ன அதன் மூலம் வரக்கூடிய பிரச்சனையில் இருந்து தப்பிப்பது எப்படி, ஒரு சில ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்வோம்.

- Advertisement -

வீட்டில் நடக்க கூடாத ஐந்து தவறுகள்:
வீட்டில் அடிக்கடி சமைக்கும் சாப்பாடு வீணாக கூடாது. சமைத்து வைப்போம். வீட்டில் இருப்பவர்கள் அந்த சாப்பாட்டை தொடக்கூட மாட்டார்கள் அப்படியே அது வீணாக போய்விடும். இரண்டாவதாக பூஜை அறையில் தேய்த்து வைத்திருக்கும் பாத்திரம் உடனடியாக அப்படியே கருப்பு நிறத்திற்கு மாறக்கூடாது. பார்த்தாலே நமக்கு தெரியும். கலை இழந்து பூஜை பொருட்கள் இருக்கும். அந்த மாதிரி அடிக்கடி நடக்கக்கூடாது.

எப்போதும் நம் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரத்திற்கும், இன்று நாம் பார்க்கும் பூஜை பாத்திரத்திற்கு வித்தியாசம் தெரியும். இன்றைக்கு தானே பூஜை பாத்திரம் தேய்த்தோம். பிறகு ஏன் இப்படி கருப்படித்து விட்டது என்று சில சமயம் யோசிப்போம் அல்லவா, அப்படி பூஜை பாத்திரம் தேய்த்து வைத்து விளக்கேற்றிய உடனடியாக கறுக்க கூடாது.

- Advertisement -

மூன்றாவது விஷயம். பூஜை அறையில் வைத்த எலுமிச்சம் பழம் அழுகக் கூடாது. விளக்குத் தானாக பற்றி எரிந்து காமாட்சியம்மன் விளக்கில் மேல்பக்கத்தில் இருக்கக்கூடிய முகம் அடிக்கடி கருகிவிடக்கூடாது. எப்பவாவது ஒரு சமயம் மறந்து தீபத்தை திரியை இப்படி எறிய விடலாம். அடிக்கடி தீபச்சுடர் முழுமையாக எரிந்து போகக்கூடாது.

உங்களுக்கு அப்படி நினைவு இல்லை. விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மறந்து விடுகிறீர்கள் என்றால், விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு, அந்த திரியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு விடுங்கள். விளக்கு எரிந்தாலும் அந்த ரூபாய் நாணயத்தை தாண்டி அம்மன் திருஉருவம் வரை நெருப்பு போகாது. நாணயத்துடனே நெருப்பு அணைந்து விடும்.

- Advertisement -

நான்காவது விஷயம். சுபகாரியத் தடை இறைவழிபாட்டில் தடை, வீட்டில் நல்ல விசேஷங்கள் சாமி கும்பிட வேண்டும் என்றால், எப்போது பார்த்தாலும் தடை. உடனடியாக ஏதாவது ஒரு சண்டை சச்சரவு, ஏதாவது தீட்டு வந்து அந்த நல்ல காரியத்தை செய்ய விடாமல் தடுப்பது, இப்படி ஒரு முறை இரண்டு முறை நடக்கலாம். ஒவ்வொரு முறையும் இதே போல நடந்தால் அதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சனை வர வாய்ப்புகள் உள்ளது.

ஐந்தாவது விஷயம் தண்ணீர் கஷ்டம். சில வீடுகளில் தண்ணீர் கஷ்டம் அதிகமாக இருக்கும். தண்ணீரை தேக்கி வைக்கவே முடியாது. நம் வீட்டிற்கு வரும் தண்ணீர் பைப்பில் மட்டும் பிரச்சனை. நம் வீட்டு மாடியில் இருக்கும் டேங்கில் மட்டும் பிரச்சனை. இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பஞ்சபூதங்களில் ஒன்றான நீரில் பிரச்சனை என்றாலும், குடும்பத்தில் கஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் தண்ணீர் கசிய கூடிய வாய்ப்பை உண்டாக்காதீங்க அப்படி தண்ணீர் கசிந்தாலும் அதை உடனடி சரி செய்ய வேண்டும்.

சரிங்க, இது எல்லாமே கஷ்டம் தான் இதை சரி செய்ய ஏதேனும் வழி உண்டா. இருக்கு, அரச மரத்து இலையில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, 48 நாட்கள் உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வர, தினமும் அருகம்புல்லை பிள்ளையாருக்கு சாத்தி வழிபாடு செய்து வர எல்லா சங்கடங்களும் விலகும்.

இதையும் படிக்கலாமே: தினமும் இந்த வேலைகளை செய்யும் பெண்களை அந்த கடவுளுக்கே ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். இந்தப் பெண்கள் வாழும் வீட்டில் நிச்சயமாக ஒரு சிக்கல் கூட இருக்காது.

தினம்தோறும் புதுசாக ஒரு அரச இலை, புதுசாக மஞ்சள் பிள்ளையார், புதுசாக அருகம்புல் வைக்க வேண்டும். மறுநாள் பூஜை செய்வதற்கு முன்பு பழையபூஜை செய்த அருகம்புல், மஞ்சள் பிள்ளையார் எல்லாவற்றையும் கொண்டு போய் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அவ்வளவுதான் முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -