(2/7/2021) தேய்பிறை அஷ்டமி! கஷ்டங்கள் தீர்க்கும் கால பைரவர் வழிபாட்டை எந்தெந்த கிழமைகளில் எப்படி செய்ய தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும் தெரியுமா? 7 கிழமையும் கால பைரவர் வழிபாடும்!

kala-bairavar-vilakku
- Advertisement -

காலசக்கரத்தை சுழற்றி கொண்டிருக்கும் காலபைரவர் வழிபாடு செய்வது என்பது கலியுகத்தில் முக்கிய வழிபடாக கருதப்படுகிறது. கலியுகத்தில் நம் கஷ்டங்களை தீர்க்க வந்தவர் காலபைரவர். சிவ ஸ்வரூபமாகவே விளங்கும் காலபைரவர் கெட்டவர்களுக்கு உக்ர மூர்த்தியாகவும், நல்லவர்களுக்கு சாந்த ஸ்வரூபம் ஆகவும் காட்சி அளிக்கக் கூடியவர். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் சிறப்பு! அது போல ஒவ்வொரு கிழமையிலும் எப்படி பைரவரை வழிபட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kala-bairavar

ஞாயிற்றுக்கிழமை:
sunday
ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஸ்வரூபமாகவே விளங்கும் காலபைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபடுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் ஏராளம். வடை மாலை, முந்திரி பருப்பு மாலை போன்ற மாலைகளை சாற்றி, புனுகு பூசி, ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் தீராத கடன் பிரச்சினையும் தீரும். தடைபட்ட திருமண முயற்சிகள் கைகூடி வரும். வறுமை நீங்கி பணவரத்து சிறப்பாக அமையும்.

திங்கட்கிழமை:
monday
திங்கட் கிழமையில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது. அதே போல கால பைரவர் வழிபாடும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. அன்றைய நாளில் வில்வார்ச்சனை செய்து, பன்னீரால் அபிஷேகம் புரிந்து, புனுகு சாற்றி, சந்தன காப்பு அணிவித்து வழிபாடு செய்பவர்களுக்கு தீராத பிணி எல்லாம் தீரும். குறிப்பாக கண் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

செவ்வாய்க்கிழமை:
tuesday
செவ்வாய்க் கிழமையில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது போல காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த சொத்துக்களை மீண்டும் பெறும் யோகம் உண்டாகும். இழந்த சொத்துக்கள் மட்டுமல்லாமல் இழந்த பொருட்கள், இழந்த உறவுகள் கூட திரும்ப கிடைக்கும் அற்புதம் நிகழும்.

புதன் கிழமை:
wednesday
புதன் கிழமைகளில் காலபைரவருக்கு சுத்த பசு நெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபடுதல் உத்தமம். அப்படி தீபமேற்றி வழிபடும் பொழுது அவருடைய திருநாமங்களையும், அஷ்டகத்தையும் வாசித்து வர சொந்த வீடு யோகம் அமையும். வீடு, மனை போன்ற விஷயங்களில் லாபம் கிடைக்க புதன் கிழமை தோறும் கால பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

வியாழக்கிழமை:
thursday
வியாழக்கிழமையில் கால பைரவர் உக்கிரத்தோடு காணப்படுவார். அவரை மனமார வேண்டி விளக்கு போட்டு வழிபட்டு வந்தால் எத்தகைய தீய சக்திகளும் நம்மை விட்டு அகலும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற எவ்வித தீய ஆற்றல்களும் நம்மை நெருங்காமல் இருக்கும். பைரவர் சன்னிதியில் கொடுக்கப்படும் விபூதியை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் விலகி ஓடும் என்பது ஐதீகம்.

வெள்ளிக்கிழமை:
friday
வெள்ளிக் கிழமையில் சூரியன் மறைந்த பின்பு பைரவர் சன்னிதியில் வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு 16 பேறுகளும் கிட்டும். செல்வத்திற்கு குறைவிருக்காது. நாளை வெள்ளிக்கிழமையில் தேய்பிறை அஷ்டமியும் வருவதால் இந்நாளை தவறவிடாமல் பைரவருக்கு வில்வார்ச்சனை செய்து நல்ல பலன்களை பெறலாம்.

சனிக்கிழமை:
saturday
சனிக் கிழமையில் சனி தோஷம் இருப்பவர்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். சனி பகவானுடைய குரு காலபைரவர் ஆவார். அவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று எந்த விதமான சனி தோஷமும் அவர்களை நெருங்குவதில்லை.

- Advertisement -