உலகத்தை அழியாமல் காக்க ஒவ்வொருவரும் வாழ்நாளில் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்! இதை செய்தால் 7 ஜென்ம பாவங்களும் தீரும்.

cow-krishna-water

இந்த உலகமானது நல்லது! கெட்டது! என்கிற இரண்டு விஷயங்களின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா விஷயத்திற்கும் இவ்விரண்டு கோணங்கள் கட்டாயம் இருக்கும். அதில் மனிதன் எதை செய்கிறான்? என்பதைப் பொறுத்தே அவனுடைய வாழ்க்கையும் அமைகிறது. பலரும், ‘இது போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கூறக் கேட்டிருப்போம். இது முற்றிலும் உண்மையான கூற்றாகும். எல்லா மனிதனும் கெட்டதை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டால் உலகம் அழியும். ஒரு சிலர் செய்யும் புண்ணிய காரியங்களினால் தான் அனைத்து ஜீவராசிகளும் இன்னும் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

Krishna mantra in tamil

மனிதன் தன்னுடைய வாழ்நாளில் செய்ய வேண்டிய இந்த 3 விஷயங்களை சரியாக செய்து விட்டால்! அவனுக்கு ஏழு ஜென்ம பாவங்கள் நீங்கும். என்றும் கர்ம வினைகள் பின் தொடராமல் சுகபோக வாழ்வு அமையும். நம்மால் யாருக்கும் நல்லது செய்ய முடியாவிட்டாலும் கூட பரவாயில்லை! தீமை செய்யாமல் இருப்பது நன்மைகளை தரும் என்பார்கள். அதே போல இந்த மூன்று விஷயத்தில் ஒன்று நல்லது செய்ய வேண்டும். இல்லை என்றால் கெட்டது செய்யாமல் இருக்க வேண்டும். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவில் படியுங்கள்.

முதலாவதாக மனிதன் செய்யக்கூடிய தவறுகளில் மிக முக்கியமான ஒன்று தண்ணீரை வீணடிப்பது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பழமொழி. நீர் இல்லை என்றால் உலகம் கட்டாயம் இயங்காமல் நின்றுவிடும். உங்களுடைய வாழ்நாளில் தண்ணீரை சேகரித்து வைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. தனிமனிதன் ஒவ்வொருவரும் தண்ணீரை வீணடிக்காமல் பார்த்துக் கொண்டால் உங்களுக்கு அடுத்து வரும் சந்ததிகள் துன்பப்படாமல் இருக்கும். ஒன்று உங்களால் முடிந்த வரை தண்ணீரை சேகரிக்க பாருங்கள். இல்லை என்றால் வீணாக்காமல் இருங்கள்.

Water

இரண்டாவதாக பசுவதை செய்வதை நிறுத்த வேண்டும். இந்து சாஸ்திரப்படி பசுவதை என்பது மிகக் கொடிய பாவமாகும். இந்த பாவத்தை செய்பவர்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. இன்று பெரும்பாலும் பசுவதை செய்வதும், அதனுடைய மாமிசத்தை சாப்பிடுவதுமாக இருக்கிறார்கள். இது உலக அழிவிற்கு காரணமாக அமையும். இந்த உலகத்தில் உங்களால் முடிந்த அளவிற்கு பசுக்களுக்கு தானம் செய்வதும், பசுக்களை பேணிக்காப்பதும் செய்தால், ஏழேழு பிறவிக்கும் பாவங்கள் நீங்கும். பசுக்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு புண்ணியமாக சேரும்.

மூன்றாவது வேதத்தை பேணி காப்பது, இவ்வுலகத்தை பேணிக் காப்பதற்கு சமமாகும். வேதம் கற்று கொடுப்பவர்களுக்கும், அதை கற்பவர்களுக்கும் நாம் கொடுக்கும் மரியாதை நம்மை பின்தொடரும் அத்தனை பாவங்களையும் நீக்கும் ஆற்றல் படைத்தது. நம்மால் வேதம் பயில முடியாவிட்டாலும்! அதனை ஊக்குவிப்பதில் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை. வேதத்தை செழிக்க செய்தால் நாட்டை செழிக்க செய்யலாம். இதை செய்வதும் மாபெரும் புண்ணியத்தை சேர்க்கும்.

Vedhas

இவ்வுலகம் அழியாமல் பாதுகாக்க நீங்கள் செய்யும் மிகச்சிறிய உதவியாக இவைகள் இருந்தாலும் உங்களை அறியாமல் மாபெரும் சரித்திரத்தை படைப்பீர்கள். இவ்வுலகம் சீராக இயங்க பஞ்ச பூதங்களும் அவசியமாகும். அதில் நீர் மட்டும் மனிதனுடைய கைகளில் சிக்கி தவிக்கிறது. அதுபோல் பசுக்களின் எண்ணிக்கை குறையக் குறைய உலகின் ஆயுளும் குறையும். வேதம் அழியும் நிலை ஏற்படும் பொழுது உலகம் அழியும் நிலை ஏற்படும். இந்த மூன்றையும் காக்கும்படியான எந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்தாலும் ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கி சுகபோக வாழ்வு கிட்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது.