சமையலறையில் பயன் தரக்கூடிய இந்த 7 குறிப்புகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ரொம்ப ரொம்ப சுலபமான, சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!

kitchen-tips
- Advertisement -

Tip No 1:
கத்தரிக்காய்களை வெட்டி தண்ணீரில் போட்டு வைத்தால் சீக்கிரமே சில சமயம் கருப்பு நிறமாக மாறிவிடும். கத்தரிக்காய்களை வெட்டி போட பாத்திரத்தில் எடுக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் பால் ஊற்றி விடுங்கள். இப்போது அந்த பால் கலந்த தண்ணீரில் கத்தரிக்காய்களை போட்டு வைத்தால் இரண்டு மணி நேரம் ஆனாலும் கத்தரிக்காய்கள் வெள்ளையாகவே இருக்கும். அதனுடைய நிறம் கருப்பாக மாறவே மாறாது. காய்ச்சிய பால் காய்ச்சாத பால் எதை வேண்டும் என்றாலும் இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tip No 2:
நாம் வாங்கி வைத்த பருப்பு வகைகள் பூச்சி பிடிக்காமல் இருக்க, பல வழிகள் உள்ளது. 1/2 கிலோ, 1 கிலோ என்று வாங்கி டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்தாலும் உங்கள் வீட்டில் பூச்சி வந்துவிடுகிறதா. இதை வெயிலில் உலர வைத்து எடுத்து வைக்க நேரம் இல்லையா. அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள் அந்த சூட்டிலேயே இந்த பருப்பு வகையை கொட்டி ஒரு நிமிடம் போல சூடு செய்து நன்றாக ஆறவிட்டு மீண்டும் டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, எந்த பருப்பிலும் வண்டு பூச்சி பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

Tip No 3:
தினசரி எல்லோர் வீட்டிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் ஹாட் பேக். ஆனால் இதனுடைய சுத்தத்தில் நாம் கவனம் செலுத்துவது கிடையாது. ஹாட் பேக்கை கொஞ்சம் முகர்ந்து பாருங்கள். அதில் இருந்து ஒரு கெட்டவாடை அடிக்கும். ஏனென்றால் சூடு பொருட்களை அதன் உள்ளே போட்டு மூடி ஸ்டோர் செய்கின்றோம் அல்லவா. வாரத்தில் ஒரு நாள் ஹாட் பேக்கில் கொதிக்கின்ற தண்ணீரை ஊற்றி அதன் மேலே மூடியை லாக் செய்ய வேண்டாம், வெறுமனே வைத்து 30 நிமிடங்கள் கழித்து அதன் பின்பு தண்ணீரை வெளியே கொட்டிவிட்டு, சாதாரணமாக கழுவிவிட்டால் ஹாட் பேக்கில் எந்த கெட்ட வாடையும் வராது.

hot-pack

Tip No 4:
சமையலறையில் அடிக்கடி பயன்படுத்தும் லைட்டரை நம்மால் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்ய முடியாது. இதனாலேயே நிறைய வீடுகளில் லைட்டர் ரொம்பவும் அழகாக இருக்கும். உங்கள் வீட்டில் நெயில் பாலிஷ் ரிமூவர் இருக்கின்றதா. அதை ஒரு சிறிய காட்டன் துணியில் ஊற்றி லைட்டரை துடைத்துப் பாருங்கள். பள பளப்பாக மாறும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

Tip No 5:
நான் ஸ்டிக் பேனில் சமைத்து முடித்தவுடன் அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விடுங்கள். பர்னர் சூட்டிலேயே நான் ஸ்டிக் பேன் இருந்தால், சீக்கிரமாகவே பழுதடைந்துவிடும். தினமும் அந்த கடையை தண்ணீர் ஊற்றி ஸ்கரப்பர் போட்டுத் தேய்த்துக் கழுவக் கூடாது. அதன் உள்ளே இருக்கும் அந்த நான்ஸ்டிக் கோட்டிங் சீக்கிரமே பெயர்ந்து வந்துவிடும். நான் ஸ்டிக் பேனில் சமைத்து முடித்து விட்டு அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட்டு, அந்த நான்ஸ்டிக் தவாவில் மேலே, அரிசி மாவு கோதுமை மாவு மைதா மாவு அல்லது கடலை மாவு இந்த நான்கு மாவில் எது உங்களுடைய வீட்டில் இருக்கின்றதோ அதை அந்த எண்ணெய் படிந்த நான் ஸ்டிக் கடாயில் தூவி, 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு தூவிய மாவை ஒரு பேப்பரை வைத்து துடைத்து எடுத்து விட வேண்டும். இப்படி துடைத்து எடுக்கும்போது அந்த பேனில் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி இருக்கும். அதன் பின்பு சுத்தமான தண்ணீரை விட்டு கழுவி விட்டால், கடாய் நீண்டநாட்களுக்கு நன்றாக இருக்கும்.

pan

Tip No 6:
இப்போது அடிக்கடி மழை பெய்ய தொடங்கி இருக்கின்றது. ஒருநாள் மழை பெய்து விட்டு விட்டால், அடுத்த நாள் கொசு நம் வீடு தேடி வர ஆரம்பிக்கும். கொஞ்சம் வேப்ப எண்ணெயை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வேப்ப எண்ணெயை எடுத்து கொஞ்சமாக உள்ளங்கைகளில் தேய்த்து அப்படியே கை கால்களில் தடவிக் கொள்ளுங்கள். இந்த வாசத்திற்கு கொசு உங்களை கடிக்காது ட்ரை பண்ணி பாருங்க.

Apple

Tip No 7:
ஆப்பிளை தோல் சீவி வெட்டி வைத்தால் அந்த ஆப்பிள் சீக்கிரமே கருப்பு நிறமாக மாறிவிடும். இதை நீண்ட நேரம் வெள்ளையாக வைப்பது எப்படி. ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு சிட்டிகை தூள் உப்பு போட்டுக் கொள்ளுங்கள். அதில் டீ குடிக்கின்ற டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவேண்டும். இந்த தண்ணீரில் வெட்டிய ஆப்பிள்களை போட்டு எடுத்து வைத்தால், ஆப்பிள்கள் நீண்ட நேரத்திற்கு நிறம் மாறாமல் இருக்கும். சுவையிலும் எந்த மாற்றமும் தெரியாது. குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக லஞ்ச் பாக்ஸில் பேக் செய்யும்போது, இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -