நாம் தினமும் பல் துலக்க பயன்படுத்தும் இந்த பேஸ்ட்டை வைத்து வீட்டில் இருக்கும் எத்தனை விஷயங்களை செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள். நீங்கள் கொடுத்தும் ஆடை முதல் ஆடை முதல் வீட்டில் இருக்கும் அனைத்து கறைகளையும் சுத்தப்படுத்து இந்த பேஸ்ட் ஆனது நமக்கு எவ்வளவு பயன்படுகிறது என்பதை இந்த பயனுள்ள வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
முதலில் பேஸ்ட்டை வைத்து வெள்ளை துணியை எப்படி துவைப்பது என்று பார்ப்போம். இதற்கு வெள்ளை நிறத்தில் உள்ள பேஸ்ட்டை தான் எடுக்க வேண்டும். மற்ற நிறங்களில் இருக்கும் பேஸ்ட்டை இதற்கு பயன்படுத்தக் கூடாது. வெள்ளை துணிகளை வாஷிங்மெஷினில் போட்ட பிறகு துணிகளின் அளவிற்கு ஏற்றவாறு பேஸ்ட்டை கொஞ்சம் தண்ணீரில் கலந்து லிக்வீடுக்கு பதிலாக இதை ஊற்றி விடுங்கள். அதன் பிறகு எப்போதும் போல் துணி துவைத்த பிறகு பாருங்கள் வெள்ளை துணி வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருக்கும்.
சில நேரங்களில் டீ வைக்கும் போது கவனக்குறைவாக அதை பொங்க விட்டு விடுவோம். இது பொங்கி கேஸ் ஸ்டவ்வின் மீது கறை போல பிடித்துக் கொள்ளும். இதை சிரமப்பட்டு தான் தேய்க்க வேண்டும். இனி அதற்கும் கவலைப்பட வேண்டாம். பேஸ்ட்டை கொஞ்சம் தண்ணீரில் கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டு ஐந்து நிமிடம் கழித்து லேசாக தேய்த்து விடுங்கள் கறை இருந்த இடம் தெரியாது.
அதே போல் கேஸ் ஸ்டவ் பர்னர்களை சுத்தப்படுத்துவதும் மிகவும் எளிதாகவே செய்து விடலாம். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பர்னர்களை போட்டு விட்டு கொஞ்சம் பேஸ்ட், அரை எலுமிச்சை பழம், கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா இவற்றை போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து தேய்த்துப் பாருங்கள், புதிதாக கடையில் இருந்து வாங்கி வந்த பர்னர் போலவே இருக்கும்.
அதுமட்டுமின்றி இந்த பேஸ்ட்டை வைத்து எண்ணெய் பிசுக்குகளையும் சுலபமாக நீக்கி விடலாம். சமைக்கும் இடத்தில் டைல்ஸில் இருக்கும் எண்ணெய் கறை, வீட்டில் இருக்கும் எண்ணெய் பாட்டில் அது பிளாஸ்டிக் ஆக இருந்தாலும் சரி கண்ணாடியாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் பேஸ்ட்டை மட்டும் கொஞ்சம் லேசாக தொட்டு தேய்த்து பாருங்கள் எண்ணெய் கறை இருந்த இடம் தெரியாது.
இதற்கு மட்டுமில்லை இந்த பேஸ்ட்டை வைத்து பாத்ரூம் டைல்ஸ் இருக்கும் கறைகளின் மீது தேய்த்து , கொஞ்ச நேரம் கழித்து பிரஷ் வைத்து தேய்த்து பாருங்கள், கறைகள்யெல்லாம் சுலபமாக நீங்கி விடும். இது மட்டும் இன்றி வீட்டில் குழந்தைகள் சுவற்றில் எல்லாம் கிறுக்கி வைத்து விடுவார்கள் அந்த கறைகாளி கூட பேஸ்ட்டை வைத்து தேய்த்து சுத்தப்படுத்தி விடலாம்
இதையெல்லாம் விட கொலுசை சுத்தப்படுத்தவும் பேஸ்ட் உதவி செய்யும். கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் வேஸ்ட்டை கலந்த பிறகு கருத்து போன உங்கள் கொலுசை கூட அதில் சிறிது நேரம் ஊற வைத்து பிறகு தேய்த்துப் பாருங்கள் கொலுசு மின்னும்.
பத்து ரூபாய்க்கு வாங்கும் பேஸ்டில் இத்தனை விஷயங்களை செய்யலாம் என்பதை இந்த குறிப்பின் மூலம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இதையும் படிக்கலாமே: இனி தேங்காய் பால் எடுக்கும் போது திக்க வரணும்னா, அதுல இந்த பொருளை மட்டும் சேர்த்துக்கோங்க போதும். அப்புறம் பாருங்க தேங்காய் பால் நல்லா கிரீம் மில்க் மாதிரி திக்கா இருக்கும்.
இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்.கண்டிப்பா ரொம்பவே உபயோகமா இருக்கும்.