- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இதையெல்லாம் வைத்து கூடவா உப்பு கரை படிந்த பாத்ரூம், டைல்ஸ் சிங்க் எல்லாம் சுத்தம் செய்வாங்க...

இதையெல்லாம் வைத்து கூடவா உப்பு கரை படிந்த பாத்ரூம், டைல்ஸ் சிங்க் எல்லாம் சுத்தம் செய்வாங்க ? கேட்கவே ஆச்சரியமா இருக்கு. இதை படிச்ச பிறகு உங்களுக்கும் இப்படி தான் தோணும். வாங்க அது என்னன்னு பாத்துரலாம்.

- Advertisement -

வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என்பது மிகவும் நல்ல ஆரோக்கியமான விஷயம். அதிலும் பாத்ரூம் சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியம் மட்டுமல்ல கட்டாயமான விஷயமும் கூட, இப்படி இதையெல்லாம் சொல்லும் போதும், கேட்கும் போதும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இந்த பாத்ரூமை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. அதற்கென ஒரு நாள் தனியாக எடுத்து தேய்த்து முடிப்பதற்குள் நாமே ஒரு வழி ஆகி விடுவோம். இனி இவ்வளவு சிரமம் இல்லாமல் சுலபமாக பாத்ரூம், டைல்ஸ் எல்லாம் எப்படி சுலபமாக சுத்தம் செய்வது என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாத்ரூம்மை சுத்தப்படுத்த இதில் நாம் பயன்படுத்த போகும் பொருள் தான் இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். அது பித்தளை, செம்பு போன்றவற்றை சுத்தபடுத்த உபயோகிக்கும் புளி தான். இப்போது அதை வைத்து பாத்ரூம்மை எப்படி சுத்தம் செய்வது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்ய லிக்விட் தயாரிக்கும் முறை
இதற்கு ஒரு பவுலில் மூன்று டேபிள் ஸ்பூன் சமையல் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஐந்து ரூபாய் சோப்பு அது பாத்திரம் அல்லது துணி துவைக்கும் எந்த சோப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அதை எடுத்து காய் சீவும் சீவலில் நன்றாக துருவி கொள்ளுங்கள். இப்படி துருவுவதால் இந்த தூள் தண்ணீரில் சீக்கிரம் கறையும். துருவிய இந்த சோப்புத் தூளையும், சமையல் சோடாவுடன் கலந்து விடுங்கள். அத்துடன் புளிக் கரைச்சலை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதற்காக புளியை புதிதாக எடுத்து தான் ஊற வைக்க வேண்டும் என்று இல்லை. சமையலுக்கு பயன்படுத்தியது போக மீதம் உள்ளதை கீழே போடாமல் எடுத்து வைத்து விடுங்கள். அதில் கொஞ்சம் சுடு தண்ணி ஊற்றி ஊற வைத்து கரைத்து அந்த தண்ணீரை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள் போதும். அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வினிகர் இவை அனைத்தையும் கலந்த பிறகு இத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை உங்கள் பாத்ரூமில் உப்பு கறை படிந்த இடம் அனைத்திலும் ஸ்பிரே பண்ணிய பிறகு பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு எப்போதும் போல் நார் வைத்தோ அல்லது ஸ்க்ரப்பர் என எப்படி நீங்கள் தேப்பீர்கர்ளோ அதை வைத்து லேசாக தேய்த்தாலே போதும். அத்தனையும் பளிச்சென்று மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஐடியா மட்டும் தெரிஞ்சா போதுங்க. டயர்டே ஆகாமல் பொங்கலுக்கு உங்களுடைய வீட்டை பம்பரம் போல சுற்றி சுற்றி சுத்தம் செய்து விடலாம்.

இப்படி சுத்தப்படுத்தும் போது இதை நீங்கள் வார வாரம் செய்ய வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தாலே கூட போதும். அதிகமாக கறை சேர்ந்தால் கூட கவலையே படாமல் சுலபத்தில் தேய்த்து எடுத்து விடலாம். இந்த குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தால், நீங்களும் வீட்டில் இந்த லிக்விட் தயாரித்து உங்கள் வீட்டு பாத்ரூம்மை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சற்று முன்