- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஹோட்டல் சுவையில் சுவையான தேங்காய் சட்னிக்கு இந்த பொருளை மட்டும் சேர்த்து அரைச்சா போதும். ரொம்ப...

ஹோட்டல் சுவையில் சுவையான தேங்காய் சட்னிக்கு இந்த பொருளை மட்டும் சேர்த்து அரைச்சா போதும். ரொம்ப டேஸ்ட்டான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெடி

- Advertisement -

தினமும் நாம் வீட்டில் இட்லி, தோசை செய்தாலுமே கூட ஹோட்டல் போனாலும் சிலர் அதையே தான் ஆர்டர் செய்வார்கள். காரணம் இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக கொடுக்கும் இந்த தேங்காய் சட்னி தான். இனி வீட்டிலும் அதே சுவையுடன் சூப்பரான அந்த தேங்காய் சட்னியை இந்த பொருள்களை மட்டும் சேர்த்து அரைத்தால் போதும் சுலபத்தில் சூப்பரான சட்னியை நாமே தயாரித்து விடலாம். வாங்க அதை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவியது – 1/2 கப், பொட்டுக்கடலை – 1/4 கப், சின்ன வெங்காயம் -3, பூண்டு – 2 பல், இஞ்சி -1 துண்டு, பச்சை மிளகாய் 3, காய்ந்த மிளகாய் -4, கருவேப்பிலை -1 கொத்து, கொத்துமல்லி – 1 கைப்பிடி, கடலை எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன், கடுகு -1/4 டீஸ்பூன், உளுந்து – 1/2 டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

இந்த சட்னி செய்ய முதலில் தேங்காய் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். எப்போது சட்னி அரைத்தாலும் தேங்காயை உடைத்த உடன் சட்னி அரைத்தால் தான் அதன் சுவை நன்றாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பிறகு எடுத்து சமைக்கும் போது அந்த அளவிற்கு சுவை இருக்காது.

செய்முறை

இப்போது மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், உடைத்த கடலை, கொத்துமல்லி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, உப்பு என அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நைசாக அரைக்காமல் கொஞ்சம் நற நறவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பவுலில் மாற்றி உங்களுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பைப் பற்ற வைத்து ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்த உடன் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இரண்டையும் ஒன்றாக எண்ணெயில் வதக்கி கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய் தேங்காயுடன் அரைப்பதை விட இப்படி வதக்கி சேர்க்கும் போது சுவையும், மணமும் கூடுதலாகவே கிடைக்கும். கடைசியாக ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து இறக்கி, இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பருப்பு வகைகள் எதுவுமே சேர்க்காமல் இது கொஞ்சம் வித்தியாசமான இட்லி பொடி! ஒருமுறை இந்த இட்லி பொடியை செஞ்சு சாப்பிட்டால், திரும்பத் திரும்ப செஞ்சிகிட்டு தான் இருப்பீங்க.

அவ்வளவு தான் சுடச்சுட இட்லியுடன் இந்த சட்னியை ஊற்றி சாப்பிட ஆரம்பித்தால் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கில்லாமல் உள்ளே செல்லும். அந்த அளவிற்கு சட்னியின் சுவை பிரமாதமாக இருக்கும். இனி சட்னி அரைக்கும் போது நீங்களும் இது போல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்