பருப்பு வகைகள் எதுவுமே சேர்க்காமல், இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட தேங்காய் இட்லி பொடி அரைப்பது எப்படி?

idli-podi
- Advertisement -

பருப்பு வகைகள் சேர்க்காமல் முற்றிலும் வித்தியாசமான ஆரோக்கியம் தரும் ஒரு இட்லி பொடி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். சுடச்சுட இட்லி, கல் தோசை, சுட சுட சாதத்தில் இதை போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் அருமையான ருசியில் இருக்கும். நீங்கள் இட்லி பொடி பிரியவர்களாக இருந்தால், ஒரு முறை மிஸ் பண்ணாமல் இந்த இட்லி பொடியையும் முயற்சி செய்து பார்க்கலாம். நேரத்தை கடத்தாமல் புதுவிதமான இந்த ரெசிபி தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆவலாக இருக்கிறதா. வாங்க பார்த்து விடலாம்.

செய்முறை

முதலில் 1 1/2 இன்ச் அளவு இஞ்சியை எடுத்து தோல் சீவி மிகப் பொடியாக நறுக்கியோ அல்லது துருவியோ வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு 10 பல் பூண்டு எடுத்து தோல் உரித்து மிகப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 15 சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் சீவி மிக மிக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் இஞ்சி துருவல் – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு பொடியாக நறுக்கியது – 2 டேபிள் ஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் – 15, சேர்த்து பொன்னிறமாக வறுத்து இதை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆர வைக்க வேண்டும். அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வர மிளகாய் – 10 போட்டு அதையும் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 2 கப் – அளவு துருவிய தேங்காயை போட்டு வறுக்க தொடங்க வேண்டும். (மீடியம் சைஸ் இருக்கும் ஒரு முழு தேங்காயை இதற்கு பயன்படுத்தலாம்.) தேங்காய் பிரவுன் கலர் வரும் அளவிற்கு நன்றாக வறுத்து விடுங்கள். கைவிடாமல் வறுக்க வேண்டும். தேங்காய் கருகிவிடக் கூடாது. தேங்காய் வறுவட்டு வந்தவுடன் இந்த தேங்காயோடு இறுதியாக புளி – கோலிக் கொண்டு அளவு, சீரகம் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு – உப்பு, போட்டு ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் வரமிளகாய் கலவையை இதில் கொட்டி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு பவுலில் மாற்றி நன்றாக ஆர வைக்க வேண்டும்.

- Advertisement -

ஆறிய பின்பு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க தொடங்குங்கள். தேங்காயில் இருக்கும் எண்ணெய் பிரிந்து, இந்த பொடி ஒரு பிசுபிசுப்பு தன்மையோடு தான் நமக்கு கிடைக்கும். எண்ணெயில் குழைத்த இட்லி பொடி போலதான் அரைபட்டு வரும். இதை அப்படியே ஒரு பாட்டிலில் மாற்றி ஸ்டோர் செய்தால் இரண்டு வாரங்கள் வெளியில் வைத்தால் கெட்டுப்போகாது. அதற்கு மேல் கெட்டுப் போய்விடும். பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பத்தே நிமிஷத்துல ரொம்ப சுவையான இந்த பிரியாணிய மட்டும் செய்து குடுத்து பாருங்க, சாப்பாடே வேண்டாம்னு சொல்ற குழந்தைங்க கூட. மூணு வேலையும் இதுவே போதும் சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

இந்த இட்லி பொடியை அரைக்கும் போதே நமக்கு எண்ணெய் சேர்த்தது போல இருப்பதால் இதை அப்படியே வைத்து இட்லிக்கு தொட்டு சாப்பிட்டலாம். இதை அப்படியே சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு கொள்ளலாம். தேவைப்பட்டால் கூடுதலாக நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். மேலே சொன்ன பொருட்களை எல்லாம் வறுக்கவும் நல்லெண்ணெய் பயன்படுத்துங்கள். இட்லி பொடி இன்னும் கொஞ்சம் நல்ல வாசமாக இருக்கும். இந்த அருமையான வித்தியாசமான இட்லி பொடி ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -