- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்முட்டை பஜ்ஜி வீட்டிலேயே இப்படி செய்யாலாம். வாழைக்காய் பஜ்ஜியை போல சூப்பராக இருக்கும்

முட்டை பஜ்ஜி வீட்டிலேயே இப்படி செய்யாலாம். வாழைக்காய் பஜ்ஜியை போல சூப்பராக இருக்கும்

- Advertisement -

முட்டை பஜ்ஜி செய்வது எப்படி | Mutta bajji recipe in Tamil

பஜ்ஜி என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது வாழைக்காய் பஜ்ஜி தான். எவ்வளவு காய்கறிகள் வைத்து பஜ்ஜி செய்தாலும், வாழைக்காய் பஜ்ஜிக்கு நிகர் இல்லை என்றே சொல்லலாம். வீட்டில் பஜ்ஜி சாப்பிட தோணும் நேரத்தில் வாழைக்காய் இல்லை என்றால் சட்டுன்னு முட்டையை வைத்து அதே போல ஒரு பஜ்ஜியை செஞ்சு அசத்தலாம். இந்த சமையல் குறிப்பு பதிவில் முட்டை பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

முட்டை – மூன்று, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பஜ்ஜி மாவு – 100 கிராம், சமையல் எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

மூணு முட்டை இருந்தால் போதும், 10 பஜ்ஜி வரைக்கும் சுட சுட மொறு மொறுன்னு சுட்டு அசத்தலாம். அதற்கு முதலில் மூன்று முட்டைகளை உடைத்து ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெறும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இந்த முட்டைக்கு தேவையான அளவிற்கு உப்பு பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் எல்லாவும் ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு நன்கு பீட் செய்ய வேண்டும். முட்டை நன்கு கலந்து வைத்த பின்பு அடுப்பில் ஒரு பேனை வைத்துக் கொள்ளுங்கள். அதில் முட்டை வேகும் அளவிற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு எல்லா இடங்களிலும் சமமாக காய விடுங்கள். பின்பு பேன் முழுவதும் நிறையுமாறு முட்டையை ஊற்றி விடுங்கள். எண்ணெயிலேயே முட்டை நன்கு வெந்து வரும். ஒரு புறம் நன்கு வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு புறமும் செக்க செவேல் என பொன்னிறமாக சிவந்து வந்திருக்கும்.

- Advertisement -

இப்போது இந்த ரவுண்ட் ஷேப் முட்டையை வாழைக்காய் பஜ்ஜி போடுவது போல நீள வாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பகுதி பகுதியாக நீளவாக்கில் வெட்டி வைத்த பஜ்ஜிகளை இப்பொழுது பஜ்ஜி மாவில் துவைத்து எடுக்க வேண்டும். இதற்கு 100 கிராம் அளவிற்கு பஜ்ஜி மாவை எடுத்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பஜ்ஜி போடுவதற்கு ஏற்ப கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பஜ்ஜி மாவில் முட்டையை முக்கி சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
ரேஷன் துவரம் பருப்பில் இப்படி ஒரு ஸ்வீட்டா? இது தெரிஞ்சா பருப்பை எப்பவோ காலி பண்ணி இருப்பேனே!

இந்த பஜ்ஜி போடும் பொழுது எண்ணெய் நன்கு கொதித்து சூடாக இருக்க வேண்டும். இல்லை என்றால் முட்டை தனியாக, மாவு தனியாக பிரிந்து வந்து விடும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கொதிக்கும் எண்ணெயில் ஒவ்வொரு பஜ்ஜியை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு பொன் நிறமாக சிவக்க உப்பி வர வறுத்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு அப்படியே வாழைக்காய் பஜ்ஜி போல இருக்கும். சுவைப்பதற்கு நல்ல சுவையில் எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கும், இந்த சூப்பரான முட்டை வாழைக்காய் பஜ்ஜி ரெசிபி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்திடுங்க.

சற்று முன்