- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமூன்றே மாதத்தில், முன் நெற்றி வழுக்கையில், முகத்தை மூடும் அளவுக்கு முடி வளர்ச்சியை பெற இந்த...

மூன்றே மாதத்தில், முன் நெற்றி வழுக்கையில், முகத்தை மூடும் அளவுக்கு முடி வளர்ச்சியை பெற இந்த 3 பொருட்கள் சேர்த்த ஹேர்பேக்கை போட்டாலே போதும். மூன்று மடங்கு முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

- Advertisement -

நிறைய பேருக்கு முன்னேற்றியில் வழுக்கை இருக்கும். அதே சமயம் ஸ்கேல்பில் முடி நெருக்க நெருக்கமாக இருக்காது. தலை சீவும் போது வழுக்கை நன்றாக தெரியும். முடி அடர்த்தியாக இல்லை, ஆங்காங்கே வழுக்கை விழுகிறது, முடி அடர்த்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், வழுக்கையில் சீக்கிரம் முடி வளர வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம். இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியோடு சேர்த்து தலையில் இருக்கும் அரிப்பு பொடுகு, இவைகளை எல்லாம் கூட ஒரு வாஷில் சரி செய்ய முடியும். அப்படி ஒரு எளிமையான ஹேர் பேக்கை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முன்னேற்றி வழுக்கையில் மூன்று மடங்கு முடி வளர்ச்சி அதிகரிக்க ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு சின்ன வெங்காயம், நெல்லிக்காய், கற்றாழை ஜெல், மூன்று பொருட்கள் இருந்தால் போதும். கற்றாழை ஜெல்லை இயற்கையாக செடியில் இருந்து தான் எடுக்க வேண்டும். செயற்கை கற்றாழை ஜெல்லை இதற்கு பயன்படுத்தக் கூடாது. ரிசல்ட் முழுமையாக கிடைக்காது.

- Advertisement -

இரண்டு நெல்லிக்காய்களை கொட்டையை நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 5 லிருந்து 6 சின்ன வெங்காயம் தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். அரை அடி கற்றாழையை சுத்தமாக கழுவி, ஓரத்தில் இருக்கும் முல்லை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரில் தயாராக இருக்கும் சின்ன வெங்காயம், நெல்லிக்காயை போட்டு, 1 ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீரை ஊற்றி, அரைத்து வடிகட்டி இதிலிருந்து சாரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாரை எடுத்து வைத்திருக்கும் ஆலோவேரா ஜெல்லோடு சேர்த்து அடித்து கலக்கினால் சூப்பரான ஒரு ஜெல் நமக்கு கிடைக்கும். இதை தான் தலைக்கு அப்ளை செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய தலையில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்து விடுங்கள். அதன் பின்பு அரை மணி நேரம் கழித்து, இந்த பேக்கை முதலில் முன்னேற்றியில் இருக்கும் வழுக்கையில் வைத்து, வட்ட வடிவில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு முடியை பாகம் பாகங்களாக பிரித்து ஸ்கேல்பில் படும்படி போட்டுக் கொள்ளுங்கள். மீதம் ஹேர் பேக் இருந்தால் முடியின் நுனி வரை போட்டு, கொண்டைக்கட்டி 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து, வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வர நிச்சயமாக உங்களுடைய வழுக்கையான இடத்தில் குட்டி குட்டியாக புதிய முடிகள் வளரத் தொடங்கும். அதேசமயம் அடர்த்தி இல்லாத முடி, அடர்த்தியாக வளரும். முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு சேர்த்து உங்களுடைய முடி வலுபெறும். முடி எளிதில் உதிராமல் இருக்கும். அதேசமயம் பொடுகு பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளை முடி இருப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் ஒரு வரம். வெள்ளை முடியை கண்ணிமைக்கும் நேரத்தில், கருப்பாக மாற்ற இதைவிட சுலபமான ஐடியா இருக்குமா என்ன?

சூப்பரான இந்த ஹேர் பேக்கை யாரும் மிஸ் பண்ணாதீங்க. ஹேர் பேக்கோடு சேர்த்து வழக்கம் போல சொல்லுவது தான். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயறு வகைகள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அப்போதுதான் முடி வளர்ச்சி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு மேலே சொன்ன இந்த அழகு குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்