- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் மூலை முடுக்கில் ஒளிந்து கொண்டிருக்கும் கரப்பான் பூச்சி, எலியெல்லாம் கூட தலை தெரிக்க ஓட...

வீட்டில் மூலை முடுக்கில் ஒளிந்து கொண்டிருக்கும் கரப்பான் பூச்சி, எலியெல்லாம் கூட தலை தெரிக்க ஓட விட இதோ சூப்பர் ஐடியா. இந்த ட்ரிக்ஸ் தெரியாம இத்தனை நாள் மண்ட காய்ஞ்சி போச்சேன்னு யோசிப்பீங்க.

- Advertisement -

வீட்டில் மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் இந்த பூச்சி தொல்லைகளை சமாளிப்பது என்பதே பெரிய சவாலாக இருக்கும். எப்படி தான் நாம் வீட்டை சுத்தமாக வைத்தாலும், எல்லாவற்றையும் மூடி வைத்து புழங்கினாலும் கூட ஏதாவது ஒன்று தப்பி தவறி வந்து விட்டால் கூட வீட்டில் இவைகளின் அட்டகாசம் அதிகரித்து விடும். இந்த டிப்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும். இது எல்லாத்தையும் சுலபமா விரட்டி அடிச்சிடும். வாங்க அது என்ன என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கரப்பான் பூச்சி பல்லி தொல்லைகள் முழுவதுமாக நீங்க:
முதலில் நம்மை பாடாய்படுத்தும் இந்த எலி தொல்லையில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு நான்கு பாரசிட்டமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பேப்பரில் வைத்து நல்ல பவுடர் ஆக்கிக் கொள்ள வேண்டும். இதை செய்வதற்கு காலாவதியான மாத்திரைகளை கூட கொள்ளலாம். அடுத்ததாக கோதுமை மாவு அல்லது மைதா மாவு இரண்டில் எது இருந்தாலும் அதை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாரசிட்டமால் மாத்திரை பவுடரை கலந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி உருண்டை பிடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த உருண்டையை சின்ன சின்னதாக உருட்டி எலி வரும் இடங்களில் எல்லாம் வைத்து விடுங்கள். ஒரு முறை இதை எடுத்து சாப்பிட்டு விட்டால் மீண்டும் அந்த இடத்திற்கு எலிகள் வரவே வராது. இப்படி செய்வதன் மூலம் எலிகளை கொல்லாமல் அவற்றை விரட்டி அடித்து அதன் தொல்லையில் இருந்து நாம் விடுபடலாம்.

அடுத்ததாக வீட்டை சுற்றி வட்ட மடித்துக் கொண்டிருக்கும் இந்த கரப்பான் பூச்சியை விரட்டுவது எப்படி என்பதை பார்க்கலாம். இதற்கு ஒரு வெங்காயத்தை எடுத்து கொள்ளுங்கள். அதை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு பல் பூண்டையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை ஒரு பௌலில் வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த சாறுடன் நாம் வீட்டில் பயன்படுத்தும் எந்த ஹேண்ட் வாஷாக இருந்தாலும் பரவாயில்லை அதில் கொஞ்சம் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி நன்றாக குலுக்கிய பிறகு கரப்பான் பூச்சி வரும் இடங்களான சிங், பாத்ரூம் மற்றும் மூளை முடுக்குகளில் லேசாக ஸ்பிரே செய்து விட்டால் போதும். இந்த வாடைக்கு கரப்பான் பூச்சி வரவே வராது.

இதையும் படிக்கலாமே: ஷாம்பூவை இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்ன்னு யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த ஷாம்பு வச்சு செய்யலாம் தெரியுமா? இதெல்லாம் தெரிஞ்சா நீங்களே ரொம்ப ஆச்சரியப்படுவீங்க.

இந்த கரப்பான் பூச்சி, எலி இவைகளை விரட்டுவதற்கு கடைகளில் அதிக விலை கொடுத்து கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக நாம் வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்து அவைகளை சுலபமாக விரட்டி விடலாம். குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதையெல்லாம் கவனமாக கையாளுங்கள். இந்த பதிவில் உள்ள குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமேயானால் நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

சற்று முன்