- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇளமையான பிரகாசமான முகத்தை பெற உதவும் ஃபேஸ் பேக்

இளமையான பிரகாசமான முகத்தை பெற உதவும் ஃபேஸ் பேக்

- Advertisement -

என்றும் இளமையாக இருக்க வேண்டும், யாரும் நம்முடைய வயதை மிகைப்படுத்தியோ அல்லது உண்மையான வயதையோ கூறக்கூடாது, வயதை குறைத்து கூறும் அளவிற்கு நம்முடைய தோற்றம் இருக்க வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவது உண்டு. முகத்தை பார்த்தே பலரும் வயதை கணக்கிட்டு கூறிவிடுவார்கள். ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு இருக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்கு வயதாகி விட்ட தோற்றமும் தோன்றும். இன்னும் சிலருக்கோ எவ்வளவு வயதானாலும் முகத்தில் எந்தவித சுருக்கமும் இல்லாமல் இளமையாக தென்படுவார்கள். அவர்களை பார்க்கும் பொழுது 10 வயது குறைத்தே கூறும் நிலையும் உண்டாகும். இப்படி இளமையாக தோற்றத்தை பெறுவதற்கு எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒருவருடைய முகம் அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இளமையாகவும் இருக்க வேண்டும். இப்படி இளமையாக இருக்க வேண்டும் என்றால் முகத்தில் எந்தவித சுருக்கமும் இருக்கக் கூடாது. கருமை இருக்கக் கூடாது. முகம் பொலிவுடன் இருக்க வேண்டும். இதற்கு கெமிக்கல் நிறைந்த பொருட்களை நம்புவதை விட இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை நம்புவது தான் புத்திசாலித்தனம். சரி இப்பொழுது இளமையான தோற்றத்தை தரும் ஃபேஸ் பேக்கை தயார் செய்வது பற்றி பார்ப்போம்.

இந்த பேஸ் பேக்கை தயார் செய்வதற்கு முதலில் நாம் ஒரு தக்காளியை எடுத்து கேரட் உரசுவது போல் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு அதையும் உரசி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவை இரண்டிலிருந்து நாம் சாரை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுக்காமல் இந்த முறையில் சாறு எடுத்தால் நல்ல பலன் தரும்.

- Advertisement -

இதனுடன் நாம் இரண்டு ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டியை சேர்க்க வேண்டும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவிற்கு பச்சை பயறு மாவை சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு பன்னீரையும் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளுங்கள். கலந்த இந்த கலவையை முகத்தை சுத்தம் செய்த பிறகு முகத்தில் தடவி இரண்டு நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்,

இது நன்றாக உணர்ந்து இறுக ஆரம்பிக்கும். நன்றாக உலர்ந்த பிறகு சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவி விடுங்கள். முகத்தில் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கும். கரும்புள்ளிகள், கருத்திட்டுக்கள், கருவளையம், பருக்கள், வடுக்கள் என்று முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும். முகம் இளமையான தோற்றத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் பொலிவுடன் திகழும்.

இதையும் படிக்கலாமே: தங்கம் போல முகம் ஜொலிக்க ஃபேஸ் பேக்

மிகவும் அற்புதமான பலனை தரக்கூடிய இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் இளமையான தோற்றத்தை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

சற்று முன்