- Advertisement -
Homeஜோதிடம்குரு வக்கிர பெயர்ச்சி 2024

குரு வக்கிர பெயர்ச்சி 2024

- Advertisement -

நவகிரகங்களில் மிக மிக முக்கியமான கிரகம் குரு பகவான். ஒரு கிரகமானது தான் இருக்கும் நிலையிலிருந்து பின்னோக்கி நகரக்கூடிய காலகட்டத்தை வக்ரப் பயிற்சி என்று சொல்லுவார்கள்.  இந்த வருட குரு வக்ரப் பெயர்ச்சி உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கிறது. அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை இந்த பெயிற்சியில் குரு பகவான் பின்னோக்கி செல்ல போகிறார். இந்த 119 நாளும் குரு பகவானால் 12 ராசிகளுக்கு ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை பற்றி தான் இன்றைய ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்கிர பெயர்ச்சியானது கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது. குறிப்பாக நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கா ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. அடுத்தவர்களுடைய பண பிரச்சனையில் நீங்கள் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. உதாரணத்திற்கு யாரோ ஒருவர் சீட்டு பிடிக்க, 10 பேரை நீங்கள் சேர்த்து விட்டால், சீட்டு பிடித்தவன் அவர்களுடைய பணத்தை பிடுங்கிக் கொண்டு ஓடி விடுவான். இடையில் சீட்டுக்காக ஆட்களை பிடித்துக் கொடுத்த நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள். இதுதான் இந்த வக்கிரப் பெயர்ச்சியில் உங்களுடைய நிலைமையாக இருக்கும். ஜாக்கிரதையாக இருங்கள். புது மனிதர்களை ஒருபோதும் நம்பாதீங்க. ரொம்பவும் தெரிந்த மனிதர்களை நம்பவே நம்பாதீங்க. காலை வாரி விட வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்கிர பெயர்ச்சியானது நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. இதுநாள் வரை உங்களை பின்தொடர்ந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். தொழிலில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்ர பெயர்ச்சியானது வலிமையாக இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்த்து போராடி வெற்றி காண்பீர்கள். இதுநாள் வரை சோம்பேறித்தனத்தோடு இருந்தவர்கள் கூட இனி வரக்கூடிய காலகட்டத்தில் அயராது உழைப்பீர்கள். வேலையிலும் தொழிலிலும் உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. நீண்ட தூர பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு வாக்குக் கொடுக்கும் விஷயத்திலும் கவனம் தேவை.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு பத்து முறை சிந்திக்க வேண்டும். மற்றபடி உங்களுடைய வேலை தொழில் எல்லாம் சுமூகமாகத்தான் செல்லும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குறிப்பாக கணவன் மனைவி உறவு பலப்படும். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளக்கூடிய நேரம் காலம் வரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த குரு வக்ர பெயர்ச்சியின் மூலம் நிறைய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த நாட்கள் எல்லாம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாட்களாகவே செல்லும். நீங்கள் கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் உங்கள் முன்னேற்றத்தை கீழே தள்ளி விட நாலு பேர் வேலை செய்வார்கள். எதிரிகளோடு போராடுவதிலேயே சில நாட்கள் முடிந்துவிடும். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. இந்த வக்ர பேச்சில் பொறுமை மட்டும் தான் உங்களுக்கு கை கொடுக்கும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வக்கிர பெயர்ச்சியானது சில பல நஷ்டங்களை ஏற்படுத்தும். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும். மருத்துவ செலவை ஏற்படுத்தும். வேலை வேலை என்று இருந்தாலும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இரவு சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும். ஓய்வு இல்லாமல் உழைப்பவர்கள் கட்டாயம் இந்த குரு வக்கிர பயிற்சி காலத்தில் கவனத்தோடு இருக்க வேண்டும். உழைப்புக்கு ஏற்ற மரியாதை, பணம் பதவி எல்லாம் வந்தாலும், உடம்பு சரி இல்லாமல் போய்விட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை பார்த்துக்கோங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வக்கிரப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த வக்கிரப் பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கும். நீங்கள் நினைத்த இடத்திற்கு எல்லாம் சுற்றுலா பயணம் சென்று வர வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் தொழிலிலும் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பதட்டம் விலகி நிம்மதியான சூழ்நிலை இருக்கும். மன அழுத்தம் நீங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்கள் இந்த வக்கிரப் பெயர்ச்சியில் பழைய விஷயங்களை மறந்து விட வேண்டும். பழைய கஷ்டங்களை திரும்பி திரும்பி நினைவு கூறும் போது மன வருத்தம் மட்டும்தான் மிஞ்சும். புதுசாக என்ன செய்யலாம், புதுசாக என்ன தொழில் செய்யலாம், புது வேலையை பார்ப்பது போன்ற விஷயங்களில் மனதை ஈடுபடுத்துங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும். வருத்தத்திலேயே அமர்ந்திருந்தால் எந்த ஒரு வேலையும் ஓடாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்ர பெயர்ச்சியானது கொஞ்சம் ஏற்ற தாழ்வுகளை கொடுக்கும். பெருசாக எந்த நஷ்டமும் ஏற்படாது. ஆனால் வேலையில் சின்ன சறுக்கல் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. செய்யும் தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். இதை எல்லாம் ஈடுகட்ட நீங்கள் ஒரு படி அதிகமாக உழைத்தாலே போதும். இழந்ததை திரும்பவும் மீட்டெடுக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அனாவசியமாக முன்கோபம் வேண்டாம். அடுத்தவர்களை உதாசீனப்படுத்தி பேச வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்கிர பெயர்ச்சியானது தவறான புரிதலை கொடுக்கும். உங்களுக்கு நல்லது செய்ய ஒருவர் வந்தாலும், அவர்களை நீங்கள் கெடுதலாக தான் பார்ப்பீர்கள். நல்லது கெட்டதை புரிந்து கொள்ள முடியாத மனநிலை உங்களுக்கு இருக்கும். எந்த விஷயத்திலும் அவசரப்படாதீங்க. யாரையும் ஒதுக்கி வைக்காதீர்கள். புது எதிரிகளை உருவாக்கும் அளவுக்கு உங்களுடைய கோபம் வெளிப்படக் கூடாது. அனுபவ சாலிகளை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அடம் பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்காதீர்கள். மாணவர்கள் குறிப்பாக கல்வியில் கவனத்தோடு இருக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி புதுப்புது நல்ல விஷயங்களை கொண்டு வந்து சேர்க்கும். புது தொழில் துவங்குவது, புது வேலைக்கு செல்வது, புது வீட்டிற்கு செல்வது இதுபோல நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும். உற்சாகத்தோடு இந்த மூன்று மாதங்களும் நகரும். இந்த நாட்கள் போனதே தெரியாது. திருமணம் ஆகாதவர்களுக்கு, திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுப காரிய செலவு ஏற்படும். சந்தோஷம் நிறைந்த நாட்கள் இது என்ஜாய் பண்ணுவீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வக்கிரப் பெயர்ச்சியில் வரக்கூடிய மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உதாரணத்திற்கு தொல்லை கொடுத்து வந்த மேனேஜரிடம் மாற்றம் ஆவங்க. அல்லது உங்களுக்கு மாற்றம் கொடுத்திடுவாங்க. மாணவர்களுக்கு பிடிக்காத டீச்சர் வேறு இடத்திற்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போயிருவாங்க. இதுபோல நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். குறிப்பாக மனைவியிடம் சண்டை போடவே போடாதீங்க. அனுசரித்து சென்றால் இந்த பெயர்ச்சி அமோக வரவேற்பு தரும்.

சற்று முன்