நம்முடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை படக்கூடிய ஒவ்வொரு நபர்களாலும் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. சாதாரண கண்திருஷ்டியால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து மிகப்பெரிய அளவில் பிறரால் செய்யப்படுகின்ற தீய சக்திகளின் பாதிப்புகளும் நம்மை அணுகாமல் இருப்பதற்கும், ஒருவேளை அப்படி யாராவது செய்த தீய சக்திகள் நம்முடைய வீட்டில் இருந்தால் அது விலகுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு காளியம்மன் மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம் பார்க்கப் போகிறோம்.
தீய சக்தியை விரட்டியடிக்கும் மந்திரம்
உக்ர தெய்வமாக திகழக்கூடியவர் காளியம்மன் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட காளியம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். எப்படி எதிரிகளின் தொல்லை நீங்குகிறதோ அதே போல் நம்மை முன்னேற விடாமல் தடுக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலான தீய சக்திகளும் விலகி ஓடுவதற்கு நம் காளியம்மனை வழிபாடு செய்யலாம்.
இன்று ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை. இன்றைய நாளில் உத்திரட்டாதி நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரம் இருக்கிறது. இந்த நட்சத்திரத்தை நாம் தேவதை நட்சத்திரம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சமமான காளியம்மன் வழிபாடு என்பது நம்முடைய குடும்பத்திற்கு கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும் விரட்டி அடிக்க உதவும்.
இந்த வழிபாட்டை காலையிலும் செய்யலாம் மாலையிலும் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் ஒரு மண் அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த தீபத்திற்கு முன்பாக வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை வைக்க வேண்டும். பிறகு அந்த வெற்றிலைக்கு மேல் சிறிதளவு டைமண்ட் கற்கண்டை வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக வாசனை மிகுந்த ஊதுபத்தியை வைத்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
இப்பொழுது இந்த தீபத்தை பார்த்தவாறு காளியம்மனை மனதார நினைத்துக் கொண்டு இந்த ஒரு மந்திரத்தை 36 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு காளியம்மனிடம் உங்களை முன்னேற விடாமல் தடுக்கக்கூடிய எப்பேர்பட்ட எதிர்மறை சக்தியாக இருந்தாலும் அது விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி தேவதை நட்சத்திரம் வரக்கூடிய நாளில் காளியம்மனின் சக்தி வாய்ந்த இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்வதன் மூலம் நம்மிடமும், நம் வீட்டிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும், எதிர்மறை ஆற்றல்களும் விலகி ஓடும்.
மந்திரம்
“ஓம்காளி மஹா காளி மம சர்வானுகிரஹம் தேஹி தேஹி”
இதையும் படிக்கலாமே:பொருளாதாரம் வளர்ச்சி உண்டாக முருகன் வழிபாடு
காளியம்மனை முழுமனதோடு நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் தேவதை நட்சத்திர நாளில் காளியம்மனின் மந்திரத்தை இந்த முறையில் கூறுபவர்களுக்கு தீய சக்திகளால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.