மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஓரம் வைத்து விட்டு, உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனபக்குவம் இருக்கும். எதிரிகளை கூட மன்னித்து ஏற்றுக் கொள்வீர்கள். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும் நாள் இன்று.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மன தைரியம் வெளிப்படும். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களைப் போல வாழ வேண்டும் என்று, உங்களை சுற்றி இருப்பவர்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்கு இன்று நீங்கள் அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருப்பீங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சாந்தமான நாளாக இருக்கும். மன சஞ்சலங்கள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப காரிய தடைகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். மனது ஒரு நிலையாக இருக்காது. அடுத்தவர்களை பார்க்கும்போது, அடுத்தவர்களுடைய வாழ்க்கை நிலையை பார்க்கும் போது, சின்ன தடுமாற்றம் ஏற்படும். கொஞ்சம் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அவசரம் வேண்டாம். இறைவழிபாடு செய்வது மனநிறைவை கொடுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். தேவையில்லாத டென்ஷன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நாளை கடந்து செல்ல உங்களுக்கு பொறுமை நிச்சயம் தேவை. புதிய எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சிக்கல்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது நல்லது. முன்கோபம் வேண்டாம். அனுபவ சாலிகளின் பேச்சைக் கேட்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். விநாயகர் வழிபாடு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வீண் விரைய செலவுகள் குறையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். குலதெய்வ கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தால், தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதானமான சந்தோஷமான நாளாக இருக்கும். எந்த ஒரு அலைச்சலும் இருக்காது. பணிவு வெளிப்படும். நன்றி கடனை வெளிப்படுத்துவீர்கள். மனதில் இருந்த சந்தேகங்களை விளக்கி வைப்பீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. பயணங்களின் மூலம் மன அழுத்தம் நீங்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். திறமை வெளிப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கும். வேகத்தை விட விவேகத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய வார்த்தைகளில் கம்பீரம் வெளிப்படும். நிறைய நல்ல விஷயங்களை இந்த நாள் உங்களுக்கு கொடுக்க போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். இருந்தாலும் வீண்விரய செலவுகளை குறைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலையில் முழு கவனத்தோடு ஈடுபாட்டோடு நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும் நாள் இன்று.