மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகத்தோடு இந்த நாளை துவங்குவீர்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் உங்களை விட்டு விலகும். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். இல்லறம் இனிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்கும். மனதில் நிம்மதி நிலைத்து இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்தலாம். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இறை வழிபாடு செய்வது கூடுதல் நல்ல பலனை கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட நாள் முயற்சி செய்த நல்ல விஷயங்கள் தானாக இன்று நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் தடையாகவே இருந்து வந்த முயற்சிகள் எல்லாம் இன்று வெற்றி அடையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். குடும்பத்தை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை வர வாய்ப்பு உள்ளது. இறைவழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும். பயம் வேண்டாம், பதட்டம் வேண்டாம், நேரத்தை வீணடிக்காமல் உங்கள் கடமையை செய்யுங்கள். நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான முயற்சிகள் வெற்றி அடையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வீண் விரைய செலவுகள் குறையும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வங்கி கடன் முயற்சிக்கலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகத்தோடு சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். பம்பரம் போல சுழன்று இந்த நாளை கடந்த செல்வீர்கள். உங்களைப் பார்ப்பவர்களுக்கே பொறாமை வரும். அந்த அளவுக்கு உங்களுடைய திறமை வெளிப்பட போகிறது. பேச்சாற்றல் வெளிப்படும். வசீகரத் தோற்றம் வெளிப்படும். இந்த நாள் இறைவன் உங்களுக்கு கொடுத்த வரமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனதை கட்டுப்படுத்தி நடக்க வேண்டும். அடுத்தவர்களை பார்த்து உங்களுடைய வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்ளக் கூடாது. ஆடம்பர செலவு கூடாது. அனாவசியமாக யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். பொறாமை படாதீர்கள். சலனம் இல்லாத உங்களுடைய மனது, இன்று நிம்மதியை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மன பக்குவம் வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். புது மனிதர்களின் அனுபவம், புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன காரிய தடைகள் வரும். உடன் இருப்பவர்களால் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அக்கம் பக்கம் வீட்டோடு சின்ன சின்ன சண்டைகள் வரலாம். கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள் இன்று.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் இருப்பவர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிகம் பேசாதீர்கள். முன்கோபம் வேண்டாம். நிதானத்தோடு இருந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். கடமைகளிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாடு மன அமைதியை தரும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செல்லுங்கள். வாழ்க்கை துணையோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள்.